மீண்டும் பயத்தில் கர்நாடகத் தமிழர்கள்
பெங்களூர்:
ராஜ்குமார் கடத்தப்பட்டபோது ஏற்பட்ட அச்சத்தைவிட இப்போது கடும் பீதியில்உள்ளனர் கர்நாடகத் தமிழர்கள்.
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 77 நாட்களுக்குப் பின்னர் இப்போது அவர்விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ராஜ்குமார் கடத்தப்பட்ட உடனே பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு கர்நாடகமாவட்டங்களில் வன்முறை ஏற்பட்டது. பெங்களூரில் மல்லேஸ்வரம், ராஜாஜிநகர்ஆகிய இடங்களில் சில தமிழர்கள் தாக்கப்பட்டனர்.
தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களும் குறி வைக்கப்பட்டன. ஆனால்,ராஜ்குமாரின் விடுதலைக்கு தமிழகத்தையே கர்நாடகம் சார்ந்து இருக்க வேண்டியநிலை ஏற்பட்டதால், ராஜ்குமார் குடும்பத்தினரும், அவரது ரசிகர் மன்றத் தலைவர்சாரா. கோவிந்தும் அனைத்துத் தரப்பினரையும் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து தாக்குதலில் இறங்கிய ராஜ்குமார் ரசிகர்கள் அமைதியாக இருந்துவந்தனர். ஆனால், பல இடங்களில் ராஜ்குமார் வரட்டும், உங்களை கவனித்துக்கொள்கிறோம் என தமிழர்களை சில கன்னட அமைப்பினரும், தீவிர கன்னடபற்றாளர்களும் மிரட்டியே வந்தனர்.
ஆனாலும் மிரட்டலுக்குப் பயந்து கர்நாடகத்தில் இருந்து சுமார் 40,000க்கும் மேற்பட்டதமிழர்கள் வெளியேறிவிட்டனர். குறிப்பாக குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வந்தஇவர்கள் தினக் கூலிகள்.
காவிரிப் பிரச்சனையில் எளிதாக தமிழர்கள் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுதாக்குதலுக்கு உள்ளானவர்கள். இதனால், பலர் தங்கள் குடும்பத்தினரை தமிழகத்துக்குஅனுப்பி வைத்துவிட்டனர்.
இவர்கள் தவிர மைசூர், மாண்டியா, தும்கூர் மாவட்டங்களில் மிகச்சிறுபான்மையினராக உள்ள தமிழர்களும் காவிரி தந்த காயத்தை மறக்காதவர்கள்.இவர்களும் அங்கிருந்து தமிழகத்துக்குள் இடம் பெயர்ந்துள்ளனர்.
ஆனால், இம்முறை தமிழகத்தின் முயற்சியில்லாமல் ராஜ்குமாரை விடுவிக்க முடியாதுஎன்ற நிலை ஏற்பட்டதால் தமிழர்கள் மீதான தாக்குதல் சில தினங்களிலேயே நின்றுபோனது. வீரப்பனும் தனது நிபந்தனைகளில் ஒன்றாக ராஜ்குமார் விடுவிக்கப்பட்டால்தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் ஏதும் நடக்கக் கூடாது எனக் கேட்டு கேசட்அனுப்பினார்.
தமிழக முதல்வரும் ஒவ்வொரு முறையும் கர்நாடக முதல்வர கிருஷ்ணாவைசந்திதத்போதெல்லாம் தமிழர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பாதுகாப்பைகர்நாடக முதல்வர் கிருஷ்ணா பலப்படுத்தினார்.
கேரளத்தில் இருந்து அதிரடிப்படையை கொண்டு வந்து அமைதியை நிலை நிறுத்தினார்முதல்வர் கிருஷ்ணா. இந்தப் படையினர் பெங்களூரில் தான் கடந்த 2 மாதங்களாகதங்கியுள்ளனர்.
இப்போது ராஜ்குமார் விடுவிக்கப்பட்டுவிட்டார் என்ற செய்தி கிடைத்துள்ளநிலையில், ரெளடிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாக்குதலில் இறங்கக் கூடும்என அச்சம் தமிழர்களிடையே பரவியுள்ளது.
ராஜ்குமார் விடுதலை குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வந்த பின்னர் தங்கள் மீதுதாக்குதல் நடத்த முயற்சிகள் நடக்கலாம் என தமிழர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஆனால், கர்நாடகத்தின் சட்டம்-ஒழுங்கை காக்க இயலாவிட்டால் பதவி விலகிவிடுங்கள், யாரால் அமைதியை நிலை நிறுத்த முடியுமோ அவர் முதல்வராகட்டும் எனஉச்ச நீதிமன்றம் ஏற்கனவே கர்நாடக முதல்வருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.கர்நாடக நிலைமையையும் உச்ச நீதிமன்றம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications