பணவீக்க விகிதம் குறையும் - யஷ்வந்த் சின்ஹா நம்பிக்கை
டெல்லி:
பணவீக்க உயர்வு விரைவில் குறையும் என்று நம்புவதாக மத்திய நிதி அமைச்சர்யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.
டெல்லியில் 3 நாள் நடைபெற உள்ள பொருளாதார ஆசிரியர்கள் மாநாட்டை அவர்திங்கள்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
பணவீக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. தற்போது பணவீக்கம் 7.6சதவீதமாக உள்ளது. இதற்கு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுதான்காரணம். விரைவில் பணவீக்கம் குறையும். அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசுஈடுபட்டுள்ளது.
பணவீக்கம் உள்பட மேலும் பல பிரச்சினைகள் இருந்தாலும், 7 சதவீதம் என்றுநிர்ணயிக்கப்பட்டுள்ள நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்திவளர்ச்சிவிகிதம் எந்த வகையிலும் குறைக்கப்படாது.
மத்திய அரசின் முன் உள்ள பிரச்சினைகளில் பணவீக்கமும் ஒன்று. பெட்ரோலியப்பொருட்களின் விலை உயர்வால் நிச்சயம் பணவீக்கமும் அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கப்பட்டதுதான். அதனால், அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளால் நியாயமான அளவுக்கு பணவீக்கம்குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் முதல் 5 மாதங்களில் தொழில் வளர்ச்சி விகிதம் குறைவாகஇருக்கிறது என்பது உண்மைதான். மின் துறைப் பொருட்கள் உற்பத்தி, மின் உற்பத்தி,ஸ்விட்ச் கியர்ஸ், பேப்பர் மற்றும் மரம் சார்ந்த பொருட்கள் துறையில் வளர்ச்சிகுறைவாக உள்ளது.
விவசாயத் துறையில் போதுமான வளர்ச்சி இல்லாதது சற்று கவலை அளிக்கக்கூடியவிஷயமாகும். காரீஃப் பருவத்தில் உணவுப் பொருள் உற்பத்தி 10 லட்சம் டன்குறைந்துவிட்டது. ஆனால் கரும்பு, பருத்தி உற்பத்தி அதிகமாக இருந்ததுகுறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் மற்ற துறைகளில் எதிர்பார்த்த அளவைவிடவும், கடந்த ஆண்டைவிடவும் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது மத்திய அரசிடம் தற்போது ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 200 கோடிஅன்னியச் செலாவணி கைருப்பு உள்ளது. இம் மாத இறுதிக்குள் இது மேலும்அதிகரிக்கும். அப்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருந்த அன்னியச்செலாவணி கையிருப்புடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டு கையிருப்பு அதிகமாகும்.
வெளிநாட்டுக்குக் கொடுக்கவேண்டிய கடன் தொகை அளவு ரூ.1.61 லட்சம்கோடியாக உள்ளது. ஆனால், அதில் எப் பிரச்சினையும் இல்லை. விரைவில்பற்றாக்குறை அளவு 2 சதவீதத்துக்கும் கீழாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டுக்குள் போதுமான அளவுக்கு நம்மிடம் அன்னியச் செலாவணிகையிருப்பு இருக்கும் என்று நம்புகிறோம்.
பங்குச் சந்தையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளில் விலை மற்றும்பெட்ரோலியப் பொருட்களின் விலை ஆகியவை சற்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.மேலும், அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் மேலும் பல இந்தியநிறுவனங்கள் பங்குகளை வெளியிட்டுள்ளன.
இதனால், இந்தியப் பங்குச் சந்தை வியாபாரம் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. மும்பைபங்குச் சந்தையில் 6 ஆயரத்திலிருந்து 3700 ஆக புள்ளிகள் குறைந்தபோதிலும்,யாருக்கும் பாக்கி கொடுக்கவேண்டியதில்லை. பங்குச் சந்தையின் செயல்பாடுபாதுகாப்பாகவே உள்ளது என்றார் சின்ஹா.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications