கருணாநிதி, கிருஷ்ணா தொலைபேசியில் அவசர ஆலோசனை
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் விடுதலை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியும்,கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் திங்கள்கிழமை தொலைபேசியில்ஆலோசனை நடத்தினர்.
ராஜ்குமார் விடுதலையாகிறார் என்ற தகவல் பரவி, 24 மணி நேரம் ஆகியும் இன்னும்பரபரப்பு அடங்கவில்லை. இதுதொடர்பாக எழுந்துள்ள எதிர்பார்ப்பு, கருணாநிதியும்,கிருஷ்ணாவும் தொலைபேசியில் பேசியுள்ளன் மூலம் அதிகரித்துள்ளது.
கிருஷ்ணாவுடன் ஞாயிற்றுக்கிழமை இரண்டு முறை கருணாநிதி பேசியதாக கர்நாடகஅரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிருஷ்ணாவுடன் மிகவும் நம்பிக்கையுடன்கருணாநிதி பேசியதாகவும், காட்டிலிருந்து வெளியே வந்தவுடன் அவரைசென்னைக்கு அழைத்து மருத்துவப் பரிசோததைன செய்த பின் பெங்களூருக்குஅனுப்பி வைக்க தமிழக அரசு விரும்புவதாக கருணாநிதி தெரிவித்தார்.
திங்கள்கிழமை காலையும் கூட கருணாநிதி, கிருஷ்ணாவுடன் தொலைபேசியில்பேசினார் என்றார் அந்த அதிகாரி.
ராஜ்குமாரின் மகன் புனீத் ராஜ்குமார் கூறுகையில், இரு அரசுகளிடமிருந்தும் தகவலைஎதிர்பார்த்துக் காத்துள்ளோம். எந்த நேரத்திலும் நாங்கள் சென்னைக்குக் கிளம்புவோம்என்றார்.
இதற்கிடையே, காட்டிலிருந்து வெளியே வரும் நடிகர் ராஜ்குமார், முதலில்ஈரோட்டுக்கும், பின்னர் சென்னைக்கும் அழைத்து வரப்படுவார் என்று போலீஸ்வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இரவு ராஜ்குமார்விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீரப்பன் வழக்கமாக யாரையும்விடுவித்தால் இரவுதான் விடுவிப்பான் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலை செய்யப்பட்டவுடன் சாலை மார்க்கமாக ராஜ்குமாரை சென்னைக்குஅழைத்து வர தமிழக அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது என்று ஒரு அதிகாரிதெரிவித்தார்.
இதற்கிடையே, ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும், அவரும், பிறபினைக் கைதிகளும் சென்னைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் ஜீ டி.வி செய்தியில்தெரிவிக்கப்பட்டது. உயர் மட்ட தகவல்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியைஜி.டிவி தெரிவித்தது.
இருப்பினும் இந்த செய்தியை, தமிழக, கர்நாடக அரசுகள் உறுதி செய்யவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications