விமானத்தில் ரூ.40 லட்சம் தங்கம் கடத்திய பெண்
சென்னை:
சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் தங்க பிஸ்கட்களை கடத்தி வந்த பெண்,சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சுமார் ரூ. 40 லட்சம்மதிப்புள்ள தங்க பிஸ்கட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம்செய்யும் பெண் ஒருவர் ஏராளமான தங்கக்கட்டிகளை கடத்தி வருவதாக சென்னைவிமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் வந்தது.
இதையடுத்து சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களில்பயணம் செய்யும் பெண் பயணிகளை சுங்க இலாகாவினர் தீவிரமாக கண்காணித்துவந்தனர்.
இந்நிலையில் கடந்த 13-ம் தேதி, சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில்வந்த வந்த பெண் பயணிகளை கஸ்டம்ஸ் அதிகாரிகள் தீவிரமாக சோதனைநடத்தினார்கள்.
அதில் வந்த ஒரு பெண் தன்னுடன் ஏர்கண்டிஷன் இயந்திரம் ஒன்றை கொண்டுவந்திருந்தார். அந்த இயந்திரத்தின் கம்ப்ரஸரை அதிகாரிகள் திறந்து பார்த்தனர்.அதற்குள் ஏராளமான தங்கக்கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம் ஏழுபது தங்க கட்டிகள் இருந்து. அதன் எடை எட்டு கிலோ. மதிப்பு சுமார்நாற்பது லட்சம் ரூபாய். தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை கடத்திவந்த பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications