தவறான சிகிச்சை: கையை இழந்த பெண்ணுக்கு அரசு வேலை
கோவை:
கோவை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கையை இழந்த பெண்ணுக்கு ஒரு லட்சம்நிதியுதவியும், அரசு பணியும் அளிக்கப்பட்டது.
கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் குன்னூரில் கட்டடக் கூலி வேலை செய்துவந்தார். இவரது மனைவி வள்ளி (24).
கடந்த 3 மாதங்களுக்கு முன் வள்ளி தலைப் பிரசவத்திற்காக கோவையில் உள்ள தாய் வீட்டிற்குவந்தார். கோவை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.இங்கு அவருக்குபிரசவம் நடந்தது.
பிரசவத்தையொட்டி அவருக்கு கையில் ஊசி போடப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர் அவரது கைஉணர்வற்றுப் போனது. இதையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனில்லை. எனவேகையை எடுக்க வேண்டும் எனக் கூறி, கையை அகற்றி விட்டனர்.
இது தொடர்பாக பிரச்சனை எழுந்தது. வள்ளி மருத்துவக் கவுன்சில் மற்றும் மனித உரிமைகமிஷனில் முறையிட்டார். தனக்கு 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தார். தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரினார்.
இது தொடர்பாக முத்லவர் கருணாநிதி, நலத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மாவட்ட கலெக்டர்ஆகியோருக்கு கடிதங்களும் மனுக்களும் அனுப்பினார். ஆனால், இந்த ஏழைப் பெண்ணை யாரும்கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து சில பெண்கள் அமைப்புகளின் உதவியுடன் மருத்துவனைக்கு உள்ளேயேஉண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். இதன் பிறகு தான் மருத்துவமனை நிர்வாகமும்,மாவட்ட அரசு நிர்வாகமும் இறங்கி வந்தன.
இவருக்கு நஷ்ட ஈடு வழங்க மனித உரிமை கமிஷன் அரசுக்குப் பரிந்துரை செய்தது. இப்பரிந்துரையை ஏற்று அரசு ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க அரசு மருத்துவமனைக்குஉத்தரவிட்டது. மேலும், கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாளர் வேலை ஒன்றும் வழங்கஅரசு பரிந்துரை செய்தது.
இந்த இரண்டு நிவாரண உதவிகளையும் அரசு மருத்துவமனை டீன் (பொறுப்பு) ராம்குமார்செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
மருத்துவமனையில் அலட்சியத்தால் கையை இழந்த அந்தப் பெண்ணுக்கு மனித உரிமைக் கமிஷன்மறுவாழ்வு வழங்கியுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications