மகுண்டுகளால் சேதமடைந்த பாலங்கள், பள்ளிகளை திருப்பிக் கட்டும் காஷ்மீர் அரசு
ஸ்ரீநகர்:
கடும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மூ-காஷ்மீரில் கல்வி, சுகாதாரம், சாலை வசதி, நீர்ப்பாசன வசதிகளைமேம்படுத்தும் முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.
குண்டு வெடிப்புகள், கண்ணி வெடிகளால் சேதமடைந்திருந்த சுமார் 168 சிறிய, பெரிய பாலங்கள் சீர்படுத்தப்பட்டுள்ளன.நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு 110 லட்சம் கேலன் அளவுக்கு குடிநீர் வசதி அளிக்கும் திட்டமும்நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தவிர 400 கிமீ. நீளத்துக்கு புதிய சாலைகளையும் மாநில அரசு போட்டுள்ளது என அம் மாநில பொதுப்பணித்துறைஅமச்சர் அலி முகம்மத் சாகர் கூறினார்.
மேலும் 30 பாலங்கள் சீர் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ. 217 கோடி செலவழிக்கப்படும்.
தீவிரவாதிகளால் எரிக்கப்பட்ட, துப்பாக்கிக் குண்டுகள், குண்டு வெடிப்புகளால் சேதமடைந்த சுமார் 19 கல்வி நிலையங்கள்ரூ. 10.6 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல தீவிரவாதிகளின் தாக்குதல்களால் சேதமடைந்த மருத்துவமனைகளும் ரூ. 116.7 கோடி செலவில்சீர்படுத்தப்பட்டு வருகின்றன எனறார் அமைச்சர்.












Click it and Unblock the Notifications