ஜெ. பங்கேற்ற விழாவில் மேடை சரிந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்டப்பட்டிருந்த மேடை,அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மேடையிலிருந்து இறங்கியவுடன்சரிந்து விழுந்தது.
கட்சியின் நிறுவன விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கட்சித் தலைமைஅலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை மாலைஅணிவித்தார்.
சிலைக்கு மாலை போடுவதற்கு வசதியாக சிறிய மேடை ஒன்றுஅமைக்கப்பட்டிருந்தது. இந்த மேடையிலிருந்து எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலைஅணிவித்து விட்டு ஜெயலலிதா கீழே இறங்கினர்.
அவர் இறங்கிய சில நிமிடங்களில் மேடை சரிந்து விழுந்தது. மேடையில் இருந்தபோட்டோகிராபர்கள் கீழே விழுந்தனர். இருப்பினும் யாருக்கும் காயம்ஏற்படவில்லை.
சம்பவம் நடந்தபோது, மேடைக்கு அருகில், புதிதாக கல்யாணம் செய்து கொண்ட 53ஜோடிகளை ஜெயலலிதா வாழ்த்துக் கொண்டிருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications