மத்திய அரசுக்கு நெருக்கடி தர மாட்டோம் .. ராம்தாஸ்
ஊட்டி:
மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எவ்வித நெருக்கடியும் தரமாட்டோம் என ஊட்டியில் ராமதாஸ் கூறினார்.
ஊட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 180 வது மண்டல அளவிலான மாநாடுநடந்தது. இந்த மாநாட்டிற்காக ஊட்டி வந்திருந்த டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:
ராஜ்குமார் கடத்தல் பிரச்னை கடந்த இரண்டரை மாதங்களாக இரண்டு மாநிலஅரசுகளையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகநீடித்து வரும் வீரப்பனின் பிரச்னைக்கு தீர்வே இல்லாமல் உள்ளது.
வீரப்பனைப் பிடிக்க இரண்டு மாநில அரசுகளும் 400 கோடி ரூபாய்க்கு மேல்செலவிட்டுள்ளன. இந்த இரு மாநில அரசுகளும் நினைத்திருந்தால் முன்பேவீரப்பனுக்குப் பொது மன்னிப்பு வழங்கி பிரச்சினையை முடித்திருக்கலாம். ஆனால்,இப்போது கடத்தல் அளவிற்குச் சென்று பிரச்னை பெரியதாகி வருகிறது.
இனி வரும் காலங்களிலும் வீரப்பன் வேறு யாரையும் கடத்த மாட்டான் என்பதுநிச்சயமில்லை. எனவே, வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டும்.இத்தகைய கடத்தல் பிரச்னைக்கு இது மட்டுமே தீர்வாக அமையும். வீரப்பனைவிடுவித்தால், வீரப்பனையோ, அவரது மனைவியையோ பாட்டாளி மக்கள் கட்சியில்சேர்க்க மாட்டோம்.
பெட்ரோல் விலை அடுத்த சில மாதங்களில் குறையும் வாய்ப்பு உள்ளது. இது குறித்துதேசிய ஜனநாயகக் கூட்டணியில் விவாதிக்கப்படும்.
நீலகிரியில் நிலவி வரும் தேயிலை பிரச்னையில் விவசாயிகளின் போராட்டத்திற்குபா.ம.கா.,முழு ஆதரவு அளிக்கும். மேலும், அடுத்து வரும் சட்டசபைக் கூட்டத்தொடரில் இது பற்றிய பிரச்னையை பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடித்தாலும், சில நேரங்களில் போராட்டம்நடத்துவது தவிர்க்க முடியாததாகும். ஆனால் எந்தவகையிலும் மத்திய அரசுக்குநெருக்கடி தர மாட்டோம்.
அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி தான்இருக்கும். பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாவது கட்சியாக இருக்கும். ஆனால் அந்தஅரசில் பங்கேற்காது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வரும் தேர்தலிலும் தொடரும்என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications