960 பள்ளிகளுக்கு கட்டடம் கட்ட ரூ.30 கோடி ஒதுக்கீடு
சென்னை:
தமிழ்நாட்டில் கட்டிடங்கள் இல்லாத 960 தொடக்கப் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ. 30 கோடியே 30 லட்சம் ரூபாய்ஒதுக்கி தமிழக முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இதுகுறித்து செவ்வாய் கிழமை அரசு வெளியிட்ட அறிக்கை:
ஜவகர் வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் பிரதமரின் கிராம வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ் தமிழ்நாட்டில் 960 தொடக்கப்பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டித் தர முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
ஒவ்வொரு பள்ளியிலும் 2 அறைகள், கழிப்பிட வசதி, தாழ்வாரத்துடனான கட்டிடங்கள் கட்டித் தரப்பட வேண்டும் என்றும்முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அப்பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் 2 லட்சத்து 13 லட்ச ரூபாய் செலவில் 2 கட்டிடங்களும், 62 ஆயிரம் ரூபாய் செலவில்தாழ்வாரம், தலா 20 ஆயிரம் ரூபாய் செலவில் 2 கழிப்பறைகளும் கட்டித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு பள்ளிக்கு 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
ஜவகர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 12 கோடியே 30 லட்ச ரூபாய் செலவிலும், பிரதமரின் கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 18கோடி ரூபாய் செலவிலும் இப்பணிகள் செய்து முடிக்கப்பட உள்ளன என்று அரசு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
