எதிர்க்கட்சிக்கு இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் பதவி?
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றிலேயே எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர்சபாநாயகர் பதவியை ஏற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்துக்குச் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. 225 இடங்களுக்குநடந்த இத் தேர்தலில் அதிபர் சந்திரிகாவின் மக்கள் கூட்டணி 116 இடங்களில் வெற்றிபெற்றது.
முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு 89 இடங்களிலும் வெற்றி பெற்றது.
தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக இலங்கை நாடாளுமன்றம் புதன்கிழமைகூடுகிறது. அப்போது சபாநாயகர், துணைச் சபாநாயகர், கமிட்டிகளின் துணைத்தலைவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
அதற்குப் பிறகு உறுப்பினர்கள் பதவியேற்பும், புதிய அமைச்சரவை அறிவிப்பும்மேற்கொள்ளப்படும். இதுவரை பிரதமராக ரத்னஸ்ரீ விக்ரமநாயகே மட்டும்பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
இந் நிலையில், சபாநாயகர் பதவிக்கு அனுரா பண்டாரநாயகே நிறுத்தப்பட்டுள்ளார்.முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி சார்பில் இப் பதவிக்குநிறுத்தப்பட்டுள்ள இவர் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் சகோதரர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
சபாநாயகர் பதவிக்குப் போட்டியிடும் அனுரா பண்டாரநாயகேவை சந்திரிகாகுமாரதுங்காவின் மக்கள் கூட்டணி எதிர்க்காது என்றும் சபாநாயகராக அவர்தேர்ந்தெடுக்கப்படுவது நிச்சயம் என்பதும் கருதப்படுகிறது.
அப்படி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் இலங்கை வரலாற்றிலேயே எதிர்க்கட்சியைச்சேர்ந்த ஒருவர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதன்முறையாகஇருக்கும்.
புதன்கிழமை தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் பெரும்சவால்களைச் சந்திக்க உள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு தவிர ஆதரவுதெரிவித்துள்ள கட்சிகளின் நிபந்தனைகளை அனுச்சரித்துச் செல்லவேண்டிய நிலையில்அதிபர் சந்திரிகா குமாரதுங்கா உள்ளார்.
நாடாளுமன்றத்தில் தனது கட்சிக்கு அருதிப்பெரும்பான்மை பலம் இருந்தால் எதைப்பற்றியும் சந்திரிகா குமாரதுங்கா கவலைப்படத் தேவையில்லை. ஆனால், நடந்துமுடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அருதிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆளும் மக்கள் கூட்டணி 116 இடங்களைப்பெற்றுள்ளது. இதில் சந்திரிகா ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ள கட்சிகள் வெற்றிபெற்ற இடங்களும் அடங்கும்.
ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸுக்கு மொத்தம் 9இடங்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 4 இடங்களும் கிடைத்துள்ளன. ஆகசந்திரிகாவின் மக்கள் கூட்டணிக்குக் கிடைத்தது 103 இடங்கள்தான்.
எனவே ஆதரவு தெரிவித்துள்ள இரு சிறுபான்மைக் கட்சிகளின்நிபந்தனைகளுக்குப்பட்டுத்தான் ஆட்சி செய்யவேண்டிய சூழ்நிலையில் சந்திரிகாகுமாரதுங்கா உள்ளார்.
அதே நேரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு 89 இடங்கள்கிடைத்துள்ளது. மூன்றாவது பெரிய கட்சியாக இடது சாரி ஜனதா விமுக்தி பெரமுனாஉள்ளது. அதற்கு 10 இடங்கள் கிடைத்துள்ளன.
இது தவிர, தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு 5 இடங்களும், தமிழ் ஈழ விடுதலைஇயக்கத்துக்கு 3 இடங்களும், அனைத்து சிலோன் தமிழ் காங்கிரஸ் மற்றும் சிங்களஊர்மயா கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைத்துள்ளன.
இக் கட்சிகள் எல்லாம் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும். எல்லா கட்சிகளுக்கும்சேர்த்து மொத்தம் 109 இடங்கள் கிடைத்துள்ளன.
நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களில் 8 பேர்பெண்களில். இவர்களில் 5 பேர் புதியவர்கள். இத் தேர்தலில் மொத்தம் 117 பேர்போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், சந்திரிகாவுக்கு நிபந்தனையின் பேரில் ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகள்திடீரென்று மனம் மாறி முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவுதெரிவிக்கும் பட்சத்தில் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும்.
ஆகவே, ஆதரவு அளித்துள்ள கட்சிகளை எந்த வகையிலாவது அனுசரித்துச்செல்லவேண்டிய மிகவும் எச்சரிக்கையான நிலையில் சந்திரிகா உள்ளார்.
வழக்கம்போல் எல்லா பணிகளும் புதன்கிழமை மேற்கொள்ளப்படும். ஆனால்,ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில்அமைச்சர் பதவிக்கு பரிந்துரைப்பது என்ற பிரச்சினை நிலவுவதால் அமைச்சரவைபதவியேற்பு இருக்காது என்று கூறப்படுகிறது.
அப்படி அமைச்சரவை பதவியேற்பு நடந்தால், சந்திரிகா குமாரதுங்காவைஅமைச்சர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் துறைகள் ஒதுக்கி பதவிப் பிரமாணம்செய்து வைப்பார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications