ஒரிசாவில் மீண்டும் ஒரு புயல் அபாயம்
புவனேஸ்வர்:
வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியிருப்பதால் ஒரிசா மாநிலத்தின்கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மீண்டும் ஒரு பேரழிவு ஏற்படுமோ என்றஅச்சத்தில் உள்ளனர்.
ஒரிசா மாநிலத்தின் கஞ்சம் மற்றும் கஜபதி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டுஇதே மாதத்தில் பெரும் புயல் அடித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர்உயிரிழந்தனர்.ஆயிரக்கணக்கானோர் வீடு, உடைமைகளை இழந்தனர்.
இந்த சுவடே இன்னும் மறையாத நிலையில், மீண்டும் ஒரு புயல் அபாயத்தை ஒரிசாமக்கள் எதிர்நோக்கியுள்ளனர். விசாகப்பட்டனம் அருகே வங்கக் கடலில், 250 கிலோமீட்டர் தொலைவில் புதிய குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியுள்ளது. இந்தப்புயல் சின்னம் ஒரிசா நோக்கி நகர்ந்து வரும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய புயல் சின்னம் குறித்து வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கைஎதுவும் கொடுக்கவில்லை. இருப்பினும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள்பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயருமாறு அறிவுரை கூறப்பட்டுள்ளது.
கடந்த முறை அக்டோபர் 29-ம் தேதி வீசிய புயல், முதலில் ஒரிசாவின் கடற்பகுதிகளைத் தாக்காது என வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியிருந்தது. ஆனால்29-ம் தேதி அடித்த புயலின் கொடூரத்தை இன்னும் ஒரிசா மக்கள் மறக்கவில்லை.எனவே இந்த முறை முன்னெச்சரிக்கையாக மக்களை பாதுகாப்பான பகுதிக்கு இடம்பெயருமாறு வானிலை ஆராய்ச்சி நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக அத்தியாவசியப்பொருட்களை வாங்கி சேகரித்து வைக்கத் துவங்கி விட்டனர். மாநில அரசும்அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்கு வசதியா முறையில் கிடைக்கவேண்டும் என்று சிவில் சப்ளை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
புயல் வீசினால் அதை சமாளிக்கும் பொருட்டு, பாதுகாப்புத் துறையினரை தயார்நிலையில் வைத்திருக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைநகர் புவனேஸ்வரில், முதல்வர் நவீன் பட்நாயக், உயர் அதிகாரிகளுடன் புயல்நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.
கஞ்சம் மாவட்டத்தின் கடலோரப் பகுதியின் நீளம் 120 கிலோமீட்டர். ஒரிசாவின்மொத்த கடலோரப் பகுதியின் நீளம் 480 கிலோமீட்டர். புயல் வீசினால் அதிகம்பாதிக்கப்படும் பகுதிகளாக ஜெகதீஷ் சிங்பூர், கேந்திரபாதா ஆகிய பகுதிகள்அடையாளம் காணப்பட்டுள்ளன. கஞ்சம் மாவட்டத்திற்கு பெரிய அளவு புயல்அபாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரிசாவில் அடுத்த 24 மணி நேரத்தில் கடும் மழை பெய்யலாம் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாய அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. கடலோரமாவட்டங்களின் கலெக்டர்களும் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு கஞ்சம் மாவட்டத்தில் வீசிய புயலில் 200 பேருக்கும் மேல் இறந்தனர்.78,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. 2.25 லட்சம் ஹெக்டேர் பயிர்கள்சேமடைந்தன. புயலுக்குப் பின் மாவட்டமே மோசமான நிலையில் இருந்தது. அதை சரிசெய்ய 1 மாதத்திற்கும் மேல் ஆனது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவில் மக்கள் வெளியேற்றம்:
இதற்கிடையே, ஆந்திர மாநிலம் நெல்லூர், மச்சிலிபட்டினம் ஆகிய கடலோரமாவட்டங்களில் கடலோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாநிலஅரசு இடம் மாற்றியுள்ளது.
புதன்கிழமை காலை புயல் கரையைக் கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாகமக்கள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். நெல்லூர், பிரகாசம், கிருஷ்மா, குண்டூர்மாவட்டங்களில் புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இங்கு புயல் நிவாரண மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கடலோர மாவட்டங்களின் கலெக்டர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். புயல்நிவாரணத்திற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
ஹைதராபாத்திலுள்ள அரசு தலைமையகத்தில் அவசரகால கண்காணிப்பு மையம்துவக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இது செயல்படும்.
புயல் கரையைக் கடக்கும்போது 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில், காற்று வீசும்என்று தெரிகிறது. புயல் அபாயம் இருப்பதால், கடலோர மாவட்டங்களில் பலத்தமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications