மதுரை அருகே மலையிலிருந்து குதித்து காதல் ஜோடி தற்கொலை
மதுரை:
மதுரை அருகே ஊரே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது மலையிலிருந்து காதலர்கள் கட்டி பிடித்தபடி குதித்துதற்கொலை செய்து கொண்டனர்.
புன்னகை மன்னன் திரைப்படத்தில் கமல்ஹாசனும், ரேகாவும் கட்டிப் பிடித்தபடி மலை உச்சியில் இருந்து குதித்து தற்கொலைசெய்து கொள்வதுபோல் இந்த காதல் ஜோடியும் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
இந்த நிஜ சோகக் காதல் தற்கொலை பற்றிய விவரம்:
மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடை பாரதிநகரில் வசிப்பவர் பூமிசேகர். இவரது மகள் பொன்ராக்கு (18). இவர்ஒத்தக்கடையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
ஒத்தக்கடை அருகேயுள்ள உலகனேரியை சேர்ந்தவர் கந்தன். சலவை தொழிலாளியான இவரது மகன் மாரியப்பன் (22).எவர்சில்வர் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
பள்ளி மாணவி பொன்ராக்கும், மாரியப்பனும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களது காதலை பற்றி தெரிந்தஇருவரது வீட்டினரும் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த காதலர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அந்த முடிவோடு சம்பவத்தன்று மாலை யானை மலை உச்சிக்கு காதலர்கள் சென்றனர். மலை உச்சியில் நின்று இருவரும் கட்டிப்பிடித்தபடி காட்சி கொடுத்தனர். மலையடிவாரத்தில் கல் உடைத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களும், அப்பகுதியில்போவோரும், வருவோரும் அந்த காட்சியை சந்தேகத்துடன் பார்த்தனர்.
சிலர் நிலைமையின் அபாயத்தை உணர்ந்து கீழே இறங்குமாறு சத்தம் கொடுத்தனர். ஆனால், அதை கொஞ்சமும் சட்டைசெய்யாமல் காதலர்கள் இருவரும் கட்டிப்பிடித்தபடியே நின்று கொண்டிருந்தனர்.
விஷயம் ஊர் முழுக்க பரவியதும் ஊரே திரண்டு வந்தது அந்த காட்சியை காண. தகவல் தெரிந்து போலீசாரும்மலையடிவாரத்திற்கு விரைந்து வந்தனர்.
சினிமாவில் வருவது போல் எல்லோரும் உரத்தக் குரலில் காதலர்களை நோக்கி பேசினர். காதலனின் நெருங்கிய நண்பர் ஒருவர்துணிச்சலுடன் மலை மீது ஏறினார். ஆனால், காதலர்கள் சென்ற உயரத்தை அவரால் நெருங்க முடியவில்லை.
அங்கிருந்தபடி காதலர்களை தற்கொலை செய்யும் முடிவை கைவிடுங்கள் என்று கெஞ்சினார். எடுத்த முடிவில் இருந்துபின்வாங்காத அந்த காதல் ஜோடி மலை உச்சியில் இருந்து கட்டி அணைத்தபடி கீழே குதித்தனர்.
ஊரார், போலீசார் கண் முன்பாகவே அவர்கள் இருவரும் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தனர். இருவரும்பாறையில் மோதி உடல் சிதறி இறந்தனர்.
அங்கு கூடியிருந்த அனைவரும் இதைக் கண்டு ஓலமிட்டுக் கதறினர். போலீசாராலும் கண்ணீரை மறைக்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications