தடா கைதிகள் வழக்கு: இன்று உச்ச நிதிமன்றத்தில் விசாரணை
டெல்லி:
மைசூர் சிறையில் உள்ள தடா கைதிகளை விடுவிப்பது தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டுவிடும் என்று தெரிகிறது. இதன் பின்னர் தான் தடா கைதிகளை கர்நாடக அரசும்,தமிழ் தீவிரவாதிகளை தமிழக அரசும் சிறைகளில் இருந்து விடுவிக்க முடியுமா என்று தெரியவரும்.
இவர்களை விடுவித்தால் தான் ராஜ்குமாரை விடுவிப்பேன் என வீரப்பன் கூறி வருகிறார்.
தடா கைதிகளை விடுவிக்க கர்நாடக அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.வீரப்பனால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் தந்தை அப்துல் கரீம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப்பிறப்பித்தது.
இதையடுத்து கர்நாடகம் தனது தரப்பு வாதத்தை எடுத்துக் கூறியது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தது.
இந்த தீர்ப்புக்காகத் தான் ராஜ்குமாரை விடுவிக்காமல் வைத்துக் கொண்டுள்ளார் வீரப்பன். தீர்ப்பை அடுத்து தான் அடுத்தவீரப்பன் என்ன செய்வான் என்பதும் அரசுகள் என்ன செய்யப் போகின்றன என்பதும் தெரிய வரும்.
ராஜ்குமாரை விட்டுவிடுவதாகக் கூறிய வீரப்பன் கடைசி நேரத்தில் ராஜ்குமாரின் மாப்பிள்ளை கோவிந்தராஜை மட்டும்விடுவித்துவிட்டு தூதர்களை திருப்பி அனுப்பி விட்டான்.












Click it and Unblock the Notifications