ராஜ்குமார் கடத்தல் ஒரு அரசியல் நாடகம்!
டெல்லி:
அரசியல் லாபத்துக்காகத் தான் ராஜ்குமார் கடத்தப்பட்டார் என உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அபிடவிட்டில்கூறப்பட்டுள்ளது.
வீரப்பனின் கோரிக்கையை ஏற்று மைசூர் சிறையில் உள்ள தமிழ்த் தடா கைதிகளை விடுவிக்க கர்நாடக அரசு முயன்றது.ஆனால், வீரப்பனால் கொல்லப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரின் தந்தை அப்துல் கரீம் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார்.
அதே போல தடா கைதிகள் விடுதலையை எதிர்த்து 2 பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கறிஞர்கள்டாக்டர் பி.எல். வதேரா, ஆதர்ஷ் கணேஷ் ஆகியோர் இந்த பொது நல வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கறிஞர் வதேரா, தமிழக காவல்துறை முன்னாள் டி.ஜி.பி.வால்டர் தேவாரம் சார்பில் ஒரு அபிடவிட்டைத் தாக்கல் செய்தார்.
வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட தமிழக-கர்நாடக கூட்டு அதிரடிப்படைக்குத் தலைமை தாங்கியவர் தேவாரம் என்பதுகுறிப்பிடத்தக்கது. வால்டர் தேவாரத்தின் சார்பில் அபிடவிட் தாக்கல் செய்த வழக்கறிஞர் வதேரா நீதிபதிகளிடம்கூறுகையில்,
வீரப்பனைப் பிடிக்க தமிழக, கர்நாடக அரசுகள் அரசியல் தைரியத்தைக் காட்டவில்லை. ஆண்டுதோறும் இவனைப்பிடிப்பதற்காக ரூ. 25 கோடி செலவிடப்பட்டது. 1995ம் ஆண்டில் வீரப்பனை கிட்டத்தட்ட தேவாரம் நெருங்கியேவிட்டார்.ஆனால், அந்த நிலையில் அவர் திடீரென பதவி மாற்றம் செய்யப்பட்டார்.
வீரப்பனின் கூட்டாளிகள் எண்ணிக்கையை 150ல் இருந்து வெறும் 5 பேராக தோவாரமும் அவரது படையினரும்குறைத்தனர். பெருமளவிலான ஆயுதங்களும், வீரப்பன் புத்ைதிருந்த கண்ணி வெடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
வீரப்பனின் கோரிக்கைகளுக்கு பணிவது என்பது கிரிமினல்கள்-அரசியல்வாதிகள் கூட்டுக்கு வழி வகுத்துவிடும்.வீரப்பனுக்கு தமிழ் தீவிரவாத அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இப்போது வீரப்பனிடமிருந்து வரும்கோரிக்கைகள், நிபந்தனைகள் எல்லாம் அவனுடையதே அல்ல. அவை தமிழ்த் தீவிரவாதிகளிடம் இருந்து வருபவை.
கடந்த 4 ஆண்டுகளாக வீரப்பனைப் பிடிக்க தமிழக, கர்நாடக அரசுகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்போதையகடத்தல் கூட அரசியல்ரீதியிலான லாபத்துக்காக நடத்தப்படும் ஒரு நாடகம் தான்.
தமிழ்த் தீவிரவாதிகள் மீதான தடா வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற்றுவிட்டது. இதில் சட்டம் தூக்கிஎறியப்பட்டுள்ளது. பொதுமக்களின் நன்மைக்காக இந்த வழக்குகளை வாபஸ் பெற்றதாக தமிழகம் கூறுகிறது. அரசின் இந்தசெயல் மூலம் பொதுமக்களுக்கு என்ன நன்மை கிடைத்துள்ளது.
வீரப்பனுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் உண்மையான அரசுத் தூதர் யாரும் ஈடுபடவில்லை. நக்கீரன் கோபால் கூடவீரப்பனின் தூதர் தான். நெடுமாறன் மற்றும் பிறரும் கூட வீரப்பனின் தூதர்கள் தான். சரியாகச் சொன்னால் வீரப்பன் தான்இப்போது வீரப்பனுடன் பேசிக் கொண்டிருக்கிறான் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications