24 மணி நேரத்தில் ஆந்திராவை புயல் தாக்கும்
ஹைதராபாத்:
அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திராவை கடுமையான புயல் தாக்கும் அபாயம்ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் தற்போது நெல்லூருக்குக் கிழக்கே 450கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
இது மேலும் தீவரமடைந்து ஆந்திராவை நோக்கி முன்னேறும் என்றும் அடுத்த 24அல்லது 30 மணி நேரத்தில் (புதன்கிழமை இரவு) நெல்லூருக்கும்மசூலிப்பட்டினத்துக்கும் இடையே புயல் கரையைக் கடக்கும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.
இப் புயலால் ஆந்திர கடலோரப் பகுதியில் வசிக்கும் சுமார் 2 கோடி பேர்கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கானபாதுகாப்பு ஏற்பாடுகளை ஆந்திர மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள 9 கடலோர மாவட்டங்களிலும் புயல் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. குண்டூர், கிருஷ்ணா, நெல்லூர், பிரகாசம் மாவட்டங்கள் புயலால்கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
புயல் காரணமாக மாவட்டங்களின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கும், தாழ்வானபகுதிகள் வெள்ளத்தால் சூழப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில்காற்று வீசும் என்றும், கடலோரப் பகுதிகளில் கடல் நீர் உட்புகும் வாய்ப்பும் உள்ளதுஎன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரிசாவுக்குப் பாதிப்பில்லை - பலத்த மழை பெய்யும்:
ஆந்திர மாநிலத்தில் வீசவுள்ள புயலால் ஒரிசாவுக்கு கடுமையான பாதிப்பு இருக்காதுஎன்று கூறப்படுகிறது. ஆனால், பலத்த மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளதுஎன்று வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும்,மசூசிலிப்பட்டினத்துக்கும் இடையேதான் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதனால், ஒரிசாவைப் புயல் தாக்கும் அபாயம் இல்லை. கடந்த ஆண்டு அக்டோபர்மாதம் வீசிய கடும் புயலைப் போல் இந்த ஆண்டு இருக்காது என்று அதிகாரிகள்கருதுகின்றனர்.
ஆனால், ஒரிசா முழுவதும் பலத்த மழை பெய்யும். காற்றும் மணிக்கு 50 முதல் 70கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஒரிசாவின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் காற்று பலமாகவீசும், பலத்த மழை காரணமாக வெள்ளப் பெருக்கும் ஏற்படும் அபாயமும் உள்ள;என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒரிசாவில் கடந்த ஆண்டு அக்டோபர் 29, 30 தேதிகளில் கடுமையான புயல் (சூப்பர்சைக்ளோன்) வீசியது. சுமார் 12 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். 3 கோடிக்கும்அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications