பணம் பங்கு போடுவதில் தகராறு .. மியான்தத், பாக். வீரர்கள் முறைப்பு

Subscribe to Oneindia Tamil

கராச்சி:

பரிசுப் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்வதில் ஏற்பட்ட தகராறை அடுத்துஅணியின் பயிற்சியாளராக ஜாவித் மியான்தத் தொடர பாகிஸ்தான் கிரிக்கெட்அணியைச் சேர்ந்த 7 முக்கிய வீரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் கென்யா தலைநகர் நைரோபியில் ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட்போட்டி நடைபெற்றது. இதில் அரையிறுதியில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான்தோற்றது.

இருந்தாலும், அரையிறுதிக்கு வந்ததற்காக பாகிஸ்தான் அணிக்குப் பரிசுப்பணம் தரப்பட்டது. ஆனால், அந்தப் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்வதுதொடர்பாக பயிற்சியாளர் மியான்தத்துக்கும் வீரர்களுக்கும் இடையே தகராறுஏற்பட்டது.

இதையடுத்து அணியின் பயிற்சியாளரா மியான்தத் தொடருவதற்குஅணியைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் கேப்டன் மோயன் கான், வாஸிம்அக்ரம், வக்கார் யூனிஸ், சக்லைன் முஷ்டாக், சயீத் அன்வர், இன்சமாம்உல்-ஹக், இஜாஸ் அகமத் ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பிரச்சினையைத் தீர்க்கவில்லை என்றால், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறஉள்ள போட்டித் தொடரில் விளையாடமாட்டோம் என்று அவர்கள்எச்சரித்துள்ளனர். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையானநெருக்கடியில் சிக்கியுள்ளது.

மியான்தத்துக்கும், வீரர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதைபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் தாகிர் ஜியா ஒப்புக் கொண்டுள்ளார்.அடுத்த சில நாட்களில் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் வரவுள்ளது.

13 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரில்விளையாட உள்ளது. இந்த தொடர் இரு நாடுகளுக்கும் முக்கியமானதுஎன்றாலும், பாகிஸ்தானுக்கு மிக முக்கியமானது. ஆகவே, தொடர்தொடங்குவதற்குள் இப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

இப் பிரச்சினையைத் தீர்க்க கிரிக்கெட் வாரியத்தின் அவரசக் கூட்டத்துக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளும்படி பயிற்சியாளர்மியான்தத்துக்கும், 7 கிரிக்கெட் வீரர்களுக்கும் அழைப்புஅனுப்பப்பட்டுள்ளது. இப் பிரச்சினையை சமூகமாகத் தீர்ப்பதற்கானமுயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

வீரர்களின் சம்பளத்தை உயர்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராகஉள்ளது. ஆனால், அது பற்றி வாரியத்திடமோ அல்லது பயிற்சியாளர் ஜாவித்மியான்தத்திடமோ எந்த வீரர்களும் பேசவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு மியான்தத்தும் சரி,7 வீரர்களும் சரி பாகிஸ்தான் அணியில் கட்டாயம் இருக்கவேண்டியசூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே எந்த வகையிலாவது இப் பிரச்சினையைத்தீர்க்க முயற்சி எடுக்கப்படும்.

கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைக்குப் பிறகு ஏற்கெனவே வீரர்களுடன்ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பயிற்சியாளர் பதவியை மியான்தத்ராஜினாமா செய்தார். ஆனால், அவர் 2003-ம் ஆண்டு வரை இந்த ஆண்டுநவம்பர் மாதம் மீண்டும் பயிற்சிாயளராக நியமிக்கப்பட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+