பாராலிம்பிக் போட்டிகள்: சிட்னியில் கோலாகலமாகத் தொடங்கின
சிட்னி:
உடல் ஊனமுற்றவர்களுக்கான 11-வது ஒலிம்பிக் போட்டிகள்(பாராலிம்பிக்) சிட்னியில் புதன்கிழமை தொடங்கின.
மழை மற்றும் கடுங் குளிருக்கு இடையே தொடக்கப் போட்டிகள் சிறப்பாகநடைபெற்றன.
கடந்த மாதம்தான் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் சிட்னியில்நடைபெற்று முடிந்தன. அதைத் தொடர்ந்து இப்போது பாராலிம்பிக்போட்டிகள் நடைபெற உள்ளன.
11 நாள் நடைபெற உள்ள இப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த3,823 பேர் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 550 பதக்கங்கள்வழங்கப்படவுள்ளன.
சிட்னி ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் 1 லட்சம்பேர் கண்டுகளித்தனர். தொடக்க விழாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித்தலைவர் சாமரான்ச் கலந்து கொண்டார்.
தொடக்க விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றில்6 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் 2 ஆயிரம் பள்ளிச்சிறுவர்களும் அடங்குவர்.
கடந்த முறை அட்லாண்டாவில் நடந்த பாராலிம்பிக் போட்டியை விடஇந்த பாராலிம்பிக் போட்டியை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கானமுயற்சிகளை சிட்னி ஒலிம்பிக் கமிட்டி மேற்கொண்டுள்ளது.
பாராலிம்பிக் போட்டிக்கான ஜோதியை ஆஸ்திரேலியாவின்சக்கரநாற்காலி பந்தய வீரர் லூயிஸ் சாவேஜ் ஏற்றி வைத்தார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications