கவுன்சிலர் தேர்தலில் கூட ஜெயலலிதாவால் நிற்கமுடியாது- ஸ்டாலின்
கரூர்:
சட்டமன்றத்தேர்தல் மட்டுமல்ல பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தலில் கூட ஜெயலலிதா போட்-டியிடமுடியாது என்று கரூரில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சென்னை மேயர் ஸ்டாலின்கூறி-னார்.
கரூர் வெங்கமேட்டில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சென்னை மேயரும்முதல்வர் கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
தி.மு.கவின் இந்த முப்பெரும் விழா-சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கொண்டுஅமைச்சர் செங்குட்டுவன் பேசும் பொழுது டூ ஆர் டை என்றார். நான் அவர் பேசியதில் உள்ளஆர் என்ற எழுத்தை எடுத்துவிட்டு டூ அண்ட் டை என்று கூறுகிறேன். அதாவது செய் அல்லதுசெத்துமடி என்பது சரியல்ல, செய்து முடித்துவிட்டு செத்துமடி என்பது தான் சரி யானது.
இங்கு வந்த பலரும் என்னை வருங்கால முதல்வர் என்று கூறினார்கள். அப்படிச்சொன்னவர்களுக்கும், கேட்டவர்களுக்கும் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நம்முடைய நிரந்தர முதல்வர் கலைஞர் தான். தனி நீதிமன்றம் டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்திருக்கிறது.
இது போக இன்னும் பல வழக்குகள் பாக்கியிருக்கிறது. இதற்கு எல்லாம் தண்டனைகள் கிடைக்கும்.அந்த தண்டனைகள் கிடைக்கும் பொழுது சட்டமன்றத்தேர்தலில் மட்டுமல்ல, பஞ்சாயத்து கவுன்சிலர்தேர்தலில் கூட ஜெயலலிதாவால் நிற்கமுடியாது பேசினார் மு.க.ஸ்டாலின்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications