தற்கொலையில் தமிழகம் 3-வது இடம்
புதுடெல்லி:
இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவதுஇடத்தில் உள்ளது.
இந்த தகவலை தேசிய குற்ற பதிவேட்டுத் துறை வெளியிட்டுள்ளது. இது பற்றி அந்தத்துறையின் தலைவர் சாரதா பிரசாத் கூறுகையில், இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் இளைஞர்கள்.அடுத்தபடியாக 30வயதிலிருந்து 44 வயதுக்கு உட்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
கடந்த ஆண்டில் மட்டும் 15 வயதிலிருந்து 29 வயதுக்கு உட்பட்ட 37.6 சதவீதஇளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலைக்கு பெரும்பாலும் குடும்பப் பிரச்சனை. கள்ளத்தொடர்பு, திருமணமாகாத,குழந்தை இல்லாத ஏக்கம், வரதட்சணை கொடுமை, தீராத நோய் போன்றவையேகாரணாக அமைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டில் குடும்ப பிரச்னை காரணமாக 3 ஆயிரத்து 728 இளைஞர்களும், 4ஆயிரத்து 412 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
45 வயதிலிருந்து 59 வயதுக்குட்பட்டவர்களில் 2 ஆயிரத்து 251 பெண்கள் குடும்பபிரச்னை தீராத நோய் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி மேற்குவங்கத்தில் அதிகபட்சமாக14 ஆயிரத்து 253 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அடுத்தபடியாகமகாராஷ்டிராவில் 13 ஆயிரத்து 658 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.மூன்றாவது இடத்தை தமிழகம் வகிக்கிறது இங்கு 10 ஆயிரத்து 934 பேர் தற்கொலைசெய்து கொண்டுள்ளனர்.
98-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஆண், பெண் தற்கொலை சராசரி விகிதம் 59.41ஆக உள்ளது என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications