மாலை நேர விளையாட்டுகளுக்கு தலிபான் அரசு தடை
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் பிற்பகலுக்கு மேல் மாலை வரை நடைபெறும் அனைத்து விளையாட்டுக்களுக்கும் தலிபான்அரசு தடை விதித்துள்ளது.
பிற்பகலிலும், மாலையிலும் நடைபெறும் முஸ்லிம் பிராத்தனைகளுக்கு விளையாட்டுக்கள் தடையாக இருக்கும்என்பதால் அதற்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக தலிபான் ரேடியோ தெரிவித்தது.
பிற்பகலில் நடைபெறும் அஸர் பிரார்த்தனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் இருந்து மாலையில் மஹ்ரெப்பிரார்த்தனை முடியும் வரை ஆப்கானிஸ்தானில் எந்த மைதானத்திலும், கிளப்புகளிலும் அனைத்து வகையானவிளையாட்டுக்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக தலிபான் அமைப்பின் உயர் தலைவர் முல்லா முகம்மது ஓமர்உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தலிபான் அரசின் இந்த உத்தரவை இஸ்லாமிய மத மேம்பாட்டு அமைச்சகத்தின் குழுக்கள் கண்காணித்துச்செயல்படுத்தும் என்று தலிபான் ரேடியோ தெரிவித்தது. உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தெரிவித்த ரேடியோ, உத்தரவை மீறுபவர்களுக்கு எந்த வகையான தண்டனை வழங்கப்படும்என்பதைத் தெரிவிக்கவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன் ஆப்கன் நாட்டு ஆட்சியைக் தலிபான் அமைப்பு கைப்பற்றிக் கொண்டது. நாட்டின் 95சதவீத பகுதிகளை ஆட்சி நடத்தி வருகிறது. நாட்டு மக்களுக்கு பல வகையான கட்டுப்பாடுகளை தலிபான் அரசுவிதித்துள்ளது. ரேடியோ, தொலைக்காட்சிகளில் இசை நிகழ்ச்சிகள் முழுவதுமாக தடை செய்யப்பட்டுவிட்டன.பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குப் பெண்கள் செல்வதைத் தடை செய்யவில்லை என்றாலும், பர்தா அணியாமல் எந்தபெண்ணும் செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் வாழும் அனைத்து ஆண்களும் நீண்ட தாடி வளர்க்கவேண்டும் என்றும் தலிபான் அரசுஉத்தரவிட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications