வீரப்பன் விவகாரத்தைக் கையில் எடுக்கிறது பா.ம.க.
மதுரை:
சட்ட மன்றத்தில் வீரப்பன் விவகாரத்தை எழுப்புவோம்என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் நிருபர்களை சந்தித்த ராமதாஸ் கூறியதாவது:
வீரப்பன் பிரச்சனையில் என்ன நடக்கிறது என்பது அரசு தூதருக்குத்தான் வெளிச்சம். தற்பொழுதுள்ள பிரச்சனைக்கு தமிழக, கர்நாடக அரசுகள் தான்முழு பொறுப்பு. வீரப்பனை பிடிக்க தமிழக அரசு இதுவரை நானுறு கோடிரூபாய் வரை செலவு செய்துள்ளது. அரசு இதில் எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை என்று கூற முடியாது.
நடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட பின், தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடலாம். வரும் சட்டசபைக் கூட்டத் தொடரில் எங்கள்எம்.எல்.ஏக்கள் இப்பிரச்சனையை கிளப்புவது குறித்து கட்சி செயற்குழு முடிவு செய்யும். பா.ம.க, தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறது.
இரண்டு எம்.பி சீட்டிற்கு நான் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக வாழப்பாடி ராமமூர்த்தி கூறினார். பின்னர் மூன்று கோடி ரூபாய் வாங்கியதாகமாற்றிக் கூறி வீண்பழி சுமத்தி வருகிறார். இது குறித்து சி.பி.ஐ மற்றும் சி.பி.சி.ஐ.டி விசாரணைகளுக்கு நான் தயார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகள் சேருவது குறித்து கருணாநிதிதான் முடிவு செய்யவேண்டும். நாங்கள் வரும் தேர்தலில் தி.மு.க ஆட்சி அமையஉறுதுணையாக இருப்போம். காங்கிரசும், த.மா.காவும் கொள்கை அளவில் ஒன்றுபட்ட கட்சிகள் தான்.
இந்த இரு கட்சிகளும் இணைந்து மூன்றாது அணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற முயற்சி எடுக்கலாம். அதே சமயம் இக்கூட்டணிக்கு நாங்கள் ஆதரவுதர மாட்டோம்.
பொது சொத்துக்களை சேதம் விளைவித்ததாக, எங்கள் கட்சியினரை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது. அவர்களை தீபாவளிக்குள்விடுதலை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.
வீரப்பன் விவகாரத்தைப் பொருத்தவரை, துவக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வீரப்பனுக்கு ஆதரவாக இருந்தது. வீரப்பனுக்குப் பொது மன்னிப்புத் தரவேண்டும் என்றும், வீரப்பனை ஆதரித்தும் ராமதாஸ் பேசினார்.
வீரப்பன் தன்னை மதித்து ராஜ்குமார் விவகாரத்தில் தலையிடக் கோருவான் என்று ராமதாஸ் எதிர்பார்த்தார். ஆனால், வீரப்பன் பாட்டாளி மக்கள்கட்சியையும், ராமதாஸையும் கண்டு கொள்ளாததால், இப்போது வீரப்பனைக் கை கழுவ பா.ம.க. முடிவு செய்து விட்டதாகத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications