எய்ட்ஸ் பயமா? இருக்கவே இருக்கிறது கோகோ கோலா!
கோலாலம்பூர்:
எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் ஹெச்.ஐ.வி. கிருமிகளை அழிக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
இருந்தாலும் அவ்வப்போது எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சிலர் கூறி வருகின்றனர். ஆனால், மருத்துவ ரீதியில் அந்த மருந்துகண்டுபிடிக்கப்படவில்லை.
ஆயுர்வேத முறையில் கண்டுபிடிக்கப்படும் மருந்தினால் மட்டுமே எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. அதற்கான முயற்சியில்தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந் நிலையில், எய்ட்ஸ் நோய் தாக்காமல் இருப்பதற்காக மலேசியாவைச் சேர்ந்த விபசாரிகள் புதுமையான முறையைக் கடைப்பிடிக்கின்றனர்.
மலேசியாவில் போர்னியோ என்ற தீவில் உள்ள சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த விபசாரிகள், கோகோ கோலா பானம் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளைக்கொல்லும் என்று நம்புகின்றனர்.
ஆண்களுடன் உடலுறவு கொள்வதற்கு முன் தங்களது அந்தரங்க உறுப்பின் மீது அவர்கள் கோகோ கோலா பானத்தைத் தெளித்துக் கொள்கின்றனர்.கோகோ கோலா பானத்தில் இருந்து வரும் நுரைகள் எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகளைக் கொல்லும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
சரவாக் மாநிலத்தில் உள்ள விபசாரிகளும், அவர்களுடன் உடலுறவு கொள்ள விரும்பும் ஆண்களும் கையில் எப்போதும் கோகோ கோலாகேன்களுடன் தான் "அலைவதாக அம் மாநிலத்தில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஆன்ட்ரூ கியூ கூறினார்.
ஆனால், மருத்துவ ரீதியில் இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இதுபோன்ற மூட நம்பிக்கையால் எய்ட்ஸ் நோய் குறித்து சரவாக் மாநில மக்கள் சரியானதகவல்களைத் தெரிந்து கொள்ளவில்லை.
இம் மாநிலத்தில் ஏராளமான எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். ஆனால், அது பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பது கவலை அளிக்கிறதுஎன்று அம் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications