எறும்பு திண்ணியை காப்பாற்றிய ம.தி.மு.க.
கரூர்:
கரூர் அருகே பிடிபட்ட எறும்பு திண்ணி, அதிகாரிகளின் அலட்சியத்தால்படாத பாடு பட்டது. இறுதியில் ம.தி.மு.க. அலுவலகம் எறும்பு திண்ணிக்குஅடைக்கலம் கொடுத்தது.
கரூர் அருகே உள்ள திருமணியலூர் என்ற இடத்தில் அமராவதிஆற்றங்கரை உள்ளது. இங்குள்ள ஒரு சாயப்பட்டறைக்குள் தற்செயலாகஒரு எறும்பு திண்ணி நுழைந்தது. சுமார் 2.5 அடி நீளமுள்ள இந்த எறும்புதிண்ணியைக் கண்ட தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
சிறிது நேரத்திற்கு பின்னர், வனத்துறையினரிடம் ஒப்படைக்கலாம் எனஎண்ணி வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். ஆனால், நீண்டநேரமாகியும் வனத்துறையினர் வரவில்லை.
இதையடுத்து பொறுமை இழந்த தொழிலாளர்கள் பொதுமக்களிடம்ஒப்படைத்தனர். பொதுமக்களுக்கு வேடிக்கைப் பொருளானது. கூட்டம்கூடி எறும்பு திண்ணியைக் கண்டு ரசித்தனர். பின்னர் சிறிது நேரத்திற்குபிறகு எறும்பு திண்ணி பிடிபட்ட விஷயத்தை போலீசில் தெரிவித்தனர்.
இதனைக் கேட்ட கரூர் டவுன் போலீசார், இது எங்கள் எல்லை இல்லை,நீங்கள் பசுபதிபாளையம் போலீசுக்குத் தகவல் கொடுங்கள் எனக் கூறிவிட்டனர். இன்னும் சிறிது நேரம் சென்றது.
இறுதியாக தீயணைப்பு படையினருக்குத் தகவல் பறந்தது. அவர்களிடம்சரியான பதில் இல்லை. இந்த சமயத்தில் பக்கத்துக் கிராமத்திற்கும் தகவல்பரவியது.
வெள்ளியணை என்ற கிராமத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் இதனைக்கேள்விப்பட்டதும், திருமணியலூருக்குச் சென்று எறும்பு திண்ணியைப்பார்த்தார். அதனுடைய செதில்கள் மருத்துவக் குணம் உடையது. எனவேஇந்த எறும்பு திண்ணி நமக்குப் பயன்படும் என கருதி, எறும்புதிண்ணியைப் பிடித்துச் செல்ல அனுமதி கேட்டார். அவருக்குபொதுமக்களிடமிருந்து அனுமதி கிடைத்தது. உடனே எறும்பு திண்ணியைஒரே அமூக்காக அமுக்கி, ஒரு சாக்குப் பைக்குள் திணித்துக் கொண்டுநடையைக் கட்டினார்.
இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட ம.தி.மு.க. வார்டு செயலர்சுரேஷ்குமார், எறும்பு திண்ணிக்கு நேர்ந்த ஆபத்தை அறிந்தார். இதனைக்காப்பாற்ற வேண்டும் என எண்ணி, வெள்ளியணைக்கு எறும்புதிண்ணியுடன் சென்று கொண்டிருந்த வைத்தியரை விரட்டிப் பிடித்தார்.
அவரிடமிருந்து அந்த எறும்பு திண்ணியை மீட்டு, கரூர் எடுத்துச் சென்றார்.அங்கு ம.தி.மு.க.,அலுவலகத்தில் அதனை ஒப்படைத்தார். பின்னர்மாவட்ட கலெக்டருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள்உடனடியாக செயல்பட்டு எறும்பு திண்ணியை பாதுகாப்பாக பெற்றுக்கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications