இந்தியாவுக்கு போர் விமானங்கள் விற்க அமெரிக்கா எதிர்க்காது - இஸ்ரேல் நம்பிக்கை
டெல்லி:
இந்தியாவுக்கு வான் வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு பணிகளைமேற்கொள்ளும் "ஃபால்கன் விமானங்களை விற்பதை அமெரிக்கா எதிர்க்காது என்றுநம்புவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் டேவிட் அபெக் கூறியதாவது:
ஃபால்கன் ரக விமானங்களை விற்பது தொடர்பாக இந்தியாவுடன் இஸ்ரேல் ஒப்பந்தம்செய்து கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்காவிடமிருந்து எந்த எதிர்ப்பும் இருக்காதுஎன்று நம்புகிறோம்.
இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான உறவு எந்த வகையிலும்பாதிக்கப்படாது என்றும் கருதுகிறோம். சீனாவுடனான விமான விற்பனைஒப்பந்தத்துக்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்ததை இந்தியாவுடனான விமானவிற்பனை ஒப்பந்த த்துடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது.
சீனா உடனான ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்தற்கு, தைவான்நாட்டுடன் ஏற்பட்ட பிரச்சினைதான் காரணம். ஆனால், அதுபோன்ற ஒரு பிரச்சினைஇந்திய விவகாரத்தில் எழவில்லை.
இஸ்ரேலிடமிருந்து ஃபால்கன் விமானங்களை வாங்குவதில் இந்தியா அதிகம் ஆர்வம்காட்டுகிறது.
பயங்கரவாதத் தடுப்பு, உளவு தகவல் பரிமாற்றம் போன்றவற்றில் இணைந்துசெயல்பட இந்தியாவும் இஸ்ரேலும் உறுதி பூண்டுள்ளன. ஆனால், ஒரு நாட்டின்விவகாரத்தில் மற்றொரு நாடு தலையிடாது.
சமீபத்தில் இஸ்ரேல் நாட்டின் பயங்கரவாத தடுப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள்ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வந்ததாக வந்துள்ள செய்திகள் முற்றிலும் தவறு.
மேற்கு ஆசியப் பிரச்சினையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கோரத்தான்இஸ்ரேல் அமைச்சர் ஷிமோன் பெரஸ் இந்தியாவுக்கு வந்தார்.
வன்முறைக்கு எதிரான, அமைதியை நிலைநாட்ட விரும்பும் நாட்டுக்கு ஆதரவுதரும்படி கோரப்பட்டது. இந்தியாவும் வன்முறைக்கு எதிரான அமைதியை விரும்பும்நாடுதான். ஆகவே, இந்தியா தனது கொள்கையின் அடிப்படையில் தனது ஆதரவைத்தெரிவிக்கும் என்று நம்புகிறோம்.
காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இருதரப்பு பேச்சுவார்த்தைதான். வன்முறையைக்கைவிட்டால்தான் பாகிஸ்தானுடன் பேச்சு என்று இந்தியா கூறியுள்ளது சரியான முடிவுஎன்றார் அபெக்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications