ஒரு வட்டத்தில் சுற்றும் தமிழகம்
ஆ. காதர் கான்
வெறும் 15,000 ஐ.டி. நிபுணர்களை வைத்துக் கொண்டு ஐயர்லாந்து சாப்ட்வேர் ஏற்றுமதியில் முன்னணியில்இருப்பதை கடந்த கட்டுரையில் குறிப்பிடிருந்தோம். ஆனால், லட்சக்கணக்கான சாப்ட்வேர் நிபுணர்கள்இருந்தாலும் சாப்ட்வேர் ஏற்றுமதியில் சர்வதேச அளவில் தமிழகத்தின் பங்கு மிகக் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டியிருந்தோம்.
இதற்கான காரணங்கள் என்ன?
முதல் காரணம் சாப்ட்வேர் நிபுணர்களுக்கு தர வேண்டிய மரியாதையை தமிழகத்தில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் தரமறுப்பது. இவர்கள் எழுதும் ஒவ்வொரு வரியும் பணமாக மாறுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால்,கிடைக்கும் லாபத்தில் இந்த நிபுணர்களுக்கு உரிய பங்கு போய்ச் சேருகிறதா என்றால் இல்லை என்பது தான்சோகமான பதில்.
இதனால் தான் சென்னை மவுண்ட்ரோட்டில் அண்ணா பிளை ஓவருக்கு கீழே உள்ள அமெரிக்க தூதரகத்தை எறும்புமொய்ப்பது மாதிரி மொய்க்கிறார்கள் இந்த சாப்ட்வேர் நிபுணர்கள். மிகச் சிறந்த நல்ல மூளைகள் உருவாக்கும்தமிழகத்தால் அவர்களை உள்ளூரிலேயே வைத்திருக்கத் தெரியவில்லை. இவர்கள் எல்லோரும் பிளேன்ஏறிவிடுவதால் ஏற்படும் இழப்பு சொல்லி மாளாதது.
இந்த விஷயத்தில் இந்த கம்ப்யூட்டர் நிபுணர்கள் மீது எந்தத் பழியையும் போட முடியாது.
ஐயர்லாந்த், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் சிறிய சாப்ட்வேர் நிறுவனங்களில் கூட ஊழியர்களுக்கு லாபத்தில் பங்குதரும் வகையில் "ஷேர்கள், ஸ்டாக் ஆப்ஷன்கள்" கொடுக்கப்படுகின்றன. நம் ஊரில் இது இன்னும் "கெட்டவார்த்தையாகவே" இருந்து வருகிறது. இதனால் ஐயர்லாந்தையும் இஸ்ரேலையும் விட்டு எப்படா அமெரிக்காபோவோம் என்ற நினைப்போ, கவலையோ அந்த நாட்டு சாப்ட்வேர் நிபுணர்களுக்கு இருப்பதில்லை. மிக அரியவாய்ப்புகள் கிடைத்தால் தவிர அவர்கள் தங்கள் நாட்டுக்கு டாடா காட்டுவதில்லை.
ஆனால், நம் ஊரில் நிலைமை அப்படியே தலைகீழ். மிக நடுத்தர, நடுத்தர குடும்பங்களில் இருந்து வந்து தங்கள்கடும் உழைப்பால் சாப்ட்வேர் கல்வியில் வெற்றி பெறும் நம் ஊர் இளைஞர்கள், இளைஞிகளுக்கு வேலைஎவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு, செய்யும் வேலைக்கு அங்கீகாரமும் பணமும் மிக முக்கியம். இதைத் தரதமிழகம் தவறும்போது அவர்கள் நல்ல இடம் தேடி நகர ஆரம்பிக்கிறார்கள். இதில அவர்கள் மீது எந்தத் தவறும்இல்லை.
சாப்ட்வேர் நிபுணர்களில் "டாப் மூளைகள்" தொடர்ந்து ஊரைவிட்டுப் போய்க் கொண்டே இருப்பதால், அவர்களைஈடு செய்ய புதியவர்களை நியமிக்கின்றன சாப்ட்வேர் நிறுவனங்கள். அவர்கள் அனுபவம் பெற்று தரம் வாய்ந்தசாப்ட்வேர்களை எழுத ஆரம்பிக்கும்போது அவர்களையும் அமெரிக்கா கொத்திக் கொண்டு செல்கிறது.
இப்படி தொடரும் இழப்புகளால் தமிழ்நாட்டு சாப்ட்வேர் தொழில்துறையால் தன்னை சரியாக நிலை நிறுத்திக்கொள்ள முடியவில்லை. சரியாக நிலை நிறுத்திக் கொள்ளாமல் எந்தத் தொழிலும் முன்னேறிவிட முடியாது.
அடுத்த முக்கிய பிரச்சனை, சாப்ட்வேர்களை தமிழகம் எப்படி மார்க்கெட் செய்கிறது என்பது." சீப்பான விலையில்சாப்ட்வேர்" என்பது தான் தமிழகத்தின் பல சாப்ட்வேர் நிறுவனங்களின் தாரக மந்திரம். விலை குறைவாகவிற்பதால் நல்ல ஊதியம் தர இந்த நிறுவனங்கள் தயாராக இல்லை. இவர்களிடம் பணி புரியவும் அனுபவம் பெற்றநிபுணர்கள் தயாராக இல்லை.
இது ஒரு வட்டம் மாதிரி ஆகிவிட்டது. இந்த வட்டத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்தால் தவிர தமிழகம்பெரிய அளவில் சாதிப்பது என்பது கேள்விக் குறியே.
சீப்பான விலை என்று தங்களை முன் நிறுத்தும் சாப்ட்வேர் நிறுவனங்கள் கடைசியில் சாப்ட்வேரின் தரத்தில் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன. ஒரு தொழிலை நசியச் செய்ய வேறு வினையே வேண்டாம்.தரத்தில் எப்போது விளையாடுகிறோமோ அப்போதே பிரச்சனை ஆரம்பம் என்று தான் அர்த்தம்.
இதில் இன்னொரு விஷயமும் உண்டு. நீ 10,000 ரூபாய்க்கு விற்கிறாயா நான் 3,500 ரூபாய்க்கு விற்கிறேன் என்றுசீனா கிளம்பியிருக்கிறது. மேலும் பல நாடுகள் இந்த அடிமாட்டு விலை போட்டியில் இறங்கலாம். இதனால்விலையை குறைத்து விற்பது நீண்ட கால அடிப்படையில் சாப்ட்வேர் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவாது. சீப்பானவிலை, குறைவான தரம் என்றால் பர்மா பஜார் அளவுக்குத் தான் மார்க்கெட் இருக்கும்.
எனவே, தரம் மிக மிக முக்கியம். இதில் தான் ஐயர்லாந்தும், இஸ்ரேலும் தமிழகத்தை விஞ்சி நிற்கின்றன. இதனால்தான் சாப்ட்வேர் விற்பனையில மிகக் குறைவான ஆட்களே இருந்தாலும் சக்கைபோடு போடுகின்றன. தரத்தைமேம்படுத்தாவிட்டால் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் தமிழக சாப்ட்வேர்துறையை இந்த இரு நாடுகளும்இருக்கும் இடம் இல்லாமல் ஆக்கிவிடும் என்கிறது ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வு.
அடுத்ததாக உள்நாட்டில் சாப்ட்வேர் விற்க தமிழக நிறுவனங்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பது மற்றொருபிரச்சனை. விவசாயத்துறையிலிருந்து நிதியமைச்சகம் வரை அனைத்து அரசுப் பிரிவுகளையும் கம்ப்யூட்டர்மயமாக்க வேண்டியது அவசியம். உள்நாட்டு சாப்ட்வேர் தொழில்துறைக்கு ஊக்கம் தர இது மிக அவசியம்.சீனாவின் அதிவேக சாப்ட்வேர் வளர்ச்சிக்கு இந்த உள்நாட்டு சாப்ட்வேர் தேவை தான முக்கியக் காரணம்.
சாப்ட்வேர் ஏற்றுமதியில் சீனா பின் தங்கித் தான் இருக்கிறது. ஆனால், அந் நாட்டின் உள்நாட்டுத் தேவைஅவர்களின் கம்ப்யூட்டர் துறையை வளமாக்கி வளரச் செய்து கொண்டிருக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications