ஊட்டி ஏரியை அழகுபடுத்த ரூ. 60 லட்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஏரிகளை ரூ. 60 லட்சம் ரூபாய் செலவில்அழகுபடுத்தும் திட்டத்தை செயல்படுத்த தமிழக சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் நடந்து வரும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சுரேஷ்ராஜன் புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் ஆய்வு செய்தார்.

ஊட்டி மற்றும் கொடைக்கானலில் உள்ள ஏரிகளை அழகு படுத்த நிதி ஒதுக்கீடுசெய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஊட்டி மற்றும் கொடைக்கானல்ஏரிகளை அறுபது லட்சம் செலவில் அழகுபடுத்தும் திட்டத்தை மத்திய, மாநில நிதிஉதவியுடன் முன்னுரிமைப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்த மாநில சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.மேலும் மத்திய, மாநில நிதி உதவியின் கீழ் குற்றாலத்தில் சுற்றுப்புறச் சூழல் பூங்காவைமுப்பத்திரெண்டு லட்சம் ரூபாய் செலவில் அமைக்கும் திட்டத்தையும் 2000 - 2001 ம்ஆண்டுக்கான முன்னுரிமைத் திட்டங்களில் மத்திய அரசு சேர்த்துள்ளது.

திருச்செந்தூர் மற்றும் பழனி ஆகிய ஊர்களுக்கு வரும் பயனிகளின் நன்மையைக்கருதி மத்திய, மாநில நிதி உதவியின் கீழ் முப்பத்திரெண்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+