சதி செய்கிறார்கள் .. சாதனை மங்கை மல்லேஸ்வரி குமுறல்
டெல்லி:
எதிர்காலத்தில் நான் எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ளமுடியாத வகையில்சதிகாரர்கள் எனக்கு எதிராக குழிபறிக்கின்றனர் என்று பளுதூக்கும் வீராங்கனைமல்லேஸ்வரி தெரிவித்தார்.
சமீபத்தில் சிட்னியில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே ஒருவெண்கலப் பதக்கம் கிடைத்தது. அப்பதக்கத்தைப் பெற்றுத் தந்தது பளுதூக்கும்போட்டியில் பெண்களுக்கான 69 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட கர்னம்மல்லேஸ்வரிதான்.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப்பெற்றது மட்டுமல்லாமல் ஒரு பதக்கத்தை வென்று தந்து சிட்னி ஒலிம்பிக்கில்இந்தியாவின் மானம் காத்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதக்கம் வென்று தந்த அவருக்கு பல மாநில அரசுகளும் பாராட்டு விழா நடத்திபரிசுகளை வழங்கி கவுரவித்தன. பல பெரிய தொழில் நிறுவனங்களும் அவரைப்பாராட்டி பரிசு வழங்கியுள்ளன.
சமீபத்தில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய பாராட்டு விழாவில் கர்னம்மல்லேஸ்வரி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:
சிட்னி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணியில் இடம் பெறவே நான்கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. நான் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளக்கூடாதுஎன்று பலர் சதி செய்தனர்.
இருப்பினும் நான் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு ஒரு பதக்கத்தை வென்றேன்.இந்தியாவுக்குக் கிடைத்த ஒரே பதக்கம் அதுதான் என்பதை நினைத்து நான் மிகவும்மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே எதிர்காலத்தில் நடைபெற போட்டிகளில் நான்கலந்து கொள்வதற்கு எதிராக அதே சதிகாரரர்கள் சதி செய்து வருகின்றனர்.
அதனால், எதிர்காலத்தில் நடைபெற உள்ள போட்டிகளில் நான் இந்தியாவின் சார்பில்கலந்து கொள்ள முடியாமல் போய்விடுமோ என்று கவலைப்படுகிறேன்.
சிட்னி ஒலிம்பிக்குக்குப் பிறகு ஓய்வு பெற நான் திட்டமிட்டேன். ஆனால், எனதுகுடும்பத்தினரும், பயிற்சியாளரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எனது ஓய்வுபெறும் முடிவை நான் மாற்றிக் கொண்டேன்.
முடிந்தவரை நான் போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கவிரும்புகிறேன். எனக்கு எதிராக சதி நடைபெறுகிறது.
அதனால், 2002-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசியப் போட்டியில் கலந்துகொள்வதற்கான பயிற்சியை நான் இன்னும் தொடங்கவில்லை.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள முதல் ஆப்பிரிக்க-ஆசியப் போட்டியிலும், உலகபளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியிலும் கலந்து கொள்ள விரும்புகிறேன்.
இப்போதைய எனது எண்ணமெல்லாம் பளுதூக்கும் அகாதெமி அமைப்பதுபற்றித்தான். அந்த அகாதெமி அமைந்துவிட்டால் எதிர்கால வீரர், வீராங்கனைகள்என்னைப் போல் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடாது.
பளுதூக்கும் அகாதெமிக்கான நபர்களை நானே இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம்செய்து தேர்ந்தெடுப்பேன். அவர்களுக்கு நன்றாகப் பயிற்சி அளித்து சர்வதேசப்போட்டிகளில் வெற்றி பெற வைப்பேன் என்றார் மல்லேஸ்வரி.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications