மேட்ச் பிக்ஸிங்: ஷார்ஜா மீது புகார் கூறாதீர்.. புகாதிர்

Subscribe to Oneindia Tamil

ஷார்ஜா:

ஷார்ஜா. கிரிக்கெட் விளையாட்டு உலகில் நுழைந்து பிரபலமாகிவிட்ட நகரம்.ஆண்டுதோறும் 2 கிரிக்கெட் போட்டித் தொடர்கள் நடத்தப்படுகின்றன.

இரண்டில் ஒரு போட்டித் தொடரிலாவது இந்தியாவும், பாகிஸ்தானும் கலந்து கொண்டுஉள்ளூர் மக்களுக்கும், அங்கு குடியேறிய தங்கள் நாட்டு மக்களுக்கும் கிரிக்கெட்போட்டியை நேரடியாக காணும் வாய்ப்பை வழங்கி வருகின்றன.

ஷார்ஜாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டித் தொடரில் வெல்லும் அணிக்கு அதிகபரிசுத் தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஷார்ஜாவில் நடைபெறும்கிரிக்கெட் போட்டித் தொடரில் கலந்து கொள்ள கிரிக்கெட் விளையாடும் அனைத்துநாடுகளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

ஷார்ஜாவில் இந்த ஆண்டின் இரண்டாவது போட்டித் தொடர் நாளை (அக்டோபர் 20)தொடங்குகிறது. இப் போட்டித் தொடரில் இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே ஆகியஅணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கிரிக்கெட் உலகையே கலக்கிய மேட்ச் பிக்ஸிங், லஞ்சஊழல் குற்றச்சாட்டுகள் உச்சகட்டத்துக்குச் சென்றன. தென் ஆப்பிரிக்கா, இந்தியா,பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கிரிக்கெட் அணிகள் இதனால் பெரிதும்பாதிக்கப்பட்டன.

உலகில் சிறந்த வீரராகக் கருதப்பட்ட குரோனியே இக் குற்றச்சாட்டில் சிக்கி கிரிக்கெட்விளையாட ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் விளையாட்டில் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு எழுந்ததுமே ஷார்ஜா மீதும்சந்தேகம் எழுந்தது. அங்கு மேட்ச் பிக்ஸிங் நடந்திருக்குமோ என்று கருதப்பட்டது.

ஆனால், ஷார்ஜாவில் முதன்முறையாக கிரிக்கெட் விளையாட்டை அறிமுகப்படுத்தியஅப்துல் ரஹ்மான் புகாதிர் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஷார்ஜாவுக்கும்மேட்ச் பிக்ஸிங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஷார்ஜாவில் அதிக அளவாக ஏறக்குறைய 160 ஒருநாள் ஆட்டங்கள்நடத்தப்பட்டுள்ளன. அதனால், ஷார்ஜா மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுக்கள்கூறப்படுவதாக வைத்துக் கொண்டாலும், அத்தகைய குற்றச்சாட்டுகள் அதிக அளவில்எழுந்ததும், கண்டுபிடிக்கப்பட்டதும் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில்தான்.

ஒரு சில ரன் அவுட்டுகளைத் தவிர ஷார்ஜா மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளைக்கூற எந்த ஆதாரமும் இல்லை. மேட்ச் பிக்ஸிங்கில் அதிகம் ஈடுபட்டதாகக் கூறப்படும்பாகிஸ்தான் அணி, ஷார்ஜாவில் தான் விளையாடிய மொத்த ஆட்டங்களில் 90 சதவீதஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்படி இருக்கும்போது ஷார்ஜா மீது எப்படி மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளைக்கூறமுடியும். கடந்த ஏப்ரலில் நடந்ததுதான் ஷார்ஜாவில் கடைசியாக நடந்த போட்டித்தொடராகும். அதில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் கலந்துகொண்டன.

இப் போட்டித் தொடர் முடிந்த அடுத்த சில வாரங்களில்தான் மேட்ச் பிக்ஸிங்கில்ஈடுபட்டதாக தென் ஆப்பிரிக்க வீரர் ஹான்சி குரோனியே பிடிபட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஷார்ஜாவில் இதுவரை 160 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.அந்த ஆட்டங்கள் எப்படி நடத்தப்பட்டனவோ அதேபோல்தான் எதிர்காலத்திலும்ஆட்டங்கள் நடத்தப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

தற்போது கிரிக்கெட் விளையாடும் நாடுகளைத் தவிர ஷார்ஜா, சிங்கப்பூர்,டொரான்டோ ஆகிய பொதுவான நகரங்களில் கிரிக்கெட் போட்டிகள்நடத்தப்படுகின்றன. இது கிரிக்கெட்டை உலகளாவிய அளவில் பிரபலப்படுத்தநடவடிக்கையாகும்.

மேலும் பல பொதுவான இடங்களைத் தேர்வு செய்து அங்கும் கிரிக்கெட் போட்டிகள்நடத்தப்படவேண்டும். அடுத்து நான் ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கிரிக்கெட்போட்டிகளை நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார் புகாதிர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+