சவால் தஸ் குரோர் கா - அக். 23 முதல் ஒளிபரப்பு
மும்பை:
ஸ்டார் டிவியின் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சிக்குப் பதில் தரும்விதத்தில் ஜீ டிவி வழங்கப் போகும் சவால் தஸ் குரோர் கா நிகழ்ச்சிஅக்டோபர் 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
வாரம் தோறும் மூன்று நாட்களுக்கு (திங்கள், செவ்வாய், வியாழன்) இரவு8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று ஜீ டிவி அறிவித்துள்ளது.இந்தப் போட்டியில் பங்கேற்போருக்கு அதிகபட்சம் ரூ. 10 கோடி பரிசுஅளிக்கப்படும்.
பிரபல இந்தி நடிகர் அனுபம் கர் சவால் தஸ் குரோர் கா நிகழ்ச்சியைநடத்துவார். முதலில் மாதுரி தீக்ஷித் இந்த நிகழ்ச்சியை நடத்துவார் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அனுபம் கர் நடத்தவுள்ளார்.இருப்பினும் அனுபம் கருடன் சேர்ந்து சில நிகழ்ச்சிகளில் மாதுரி தீக்ஷித்தைநடத்த வைக்க ஜீ டிவி திட்டமிட்டுள்ளது.
துவக்க சுற்றுப் போட்டிகளில் பங்கேற்போரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புஎர்ன்ஸ்ட் அன்ட் யங் அமைப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தநிகழ்ச்சியில் பங்கேற்க 20 லட்சம் பேர் வரை விருப்பம் தெரிவித்துள்ளதாகத்தெரிகிறது.
போட்டியில் கலந்து கொள்ள முதலில் 21 பேர் தேர்வு செய்யப்படுவர்.அவர்களிலிருந்து 3 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாவர். இந்த மூன்றுபேருக்கும் தலா ரூ. 10,000 மதிப்புள்ள தங்க நாணயம் வழங்கப்படும்.பங்கேற்கும் ஒவ்வொருவரும், சரியான பதிலைச் சொல்லும்போது முதலில்10 புள்ளிகள் வழங்கப்படும். பின்னர் அது பத்தின் மடங்காகஅதிகரிக்கப்படும். அதாவது, 10, 100, 1000 ...என்று.
இறுதிச் சுற்றில் கலந்து கொள்ளும் மூன்று பேரில் அதிக புள்ளிகளைப் பெறும்போட்டியாளர், அனுபம் கருடன் இறுதிக் கேள்விச் சுற்றுக்கு தகுதி பெறுவார்.இதில் பரிசுத் தொகை ரூ. 10,000த்திலிருந்து துவங்கும். புள்ளிகள்1000த்திலிருந்து துவங்கும். இதிலும் பத்தின் மடங்காகவே புள்ளிகள்அதிகரிக்கும். பரிசுத் தொகையும் பத்தின் மடங்காகவே இருக்கும்.
அதாவது, முதல் கேள்விக்கு ரூ. 10,000 பரிசு பெற்றால், இரண்டாவதுகேள்விக்கான பரிசு ரூ. 1 லட்சம் ஆகும். 3-வது கேள்விக்கான பரிசுத் தொகைரூ. 10 லட்சம். ஐந்து கேள்விகள் கேட்கப்படும். அனைத்தையும் சரியாகச்சொன்னால் அவர்தான் பத்து கோடிக்குச் சொந்தக்காரர்.
கோன் பனேகா குரோர்பதியைப் போலவே இந்த நிகழ்ச்சியிலும் ஹெல்ப்ன்ைஉண்டு.
சரியான போட்டிதான்!
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications