ஜப்பான் கடலில் ரஷ்ய கப்பல் மூழ்கியது - ஊழியர்கள் தப்பினர்
டோக்யோ:
ஜப்பான் அருகே ரஷ்ய கப்பல் மூழ்கியது. கப்பல் ஊழியர்கள் அனைவரும்உயிர் காப்புப் படகுகள் மூலம் உயிர் தப்பினர்.
ஜப்பானின் ஹொக்கைடோ தீவு அருகே நெமுரோ கடல்பகுதியில்வியாழக்கிழமை அதிகாலை 1.30-க்கு இவ் விபத்து நேர்ந்ததாகக்கூறப்படுகிறது.
டைஃபன் -1 என்ற அந்த கப்பலில் இருந்தவர்களின் அபயக் குரலைக் கேட்டுஜப்பான் கடற்படை மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
அங்கு 3 உயிர் காப்புப் படகுகளில் சிலர் இருந்தனர். அவர்களை மீட்டுவிசாரித்தபோது, கப்பலின் இன்ஜின் பகுதியில் தண்ணீர் புகுந்து கப்பல் மூழ்கிவிட்டதாகவும் கூறினர்.
கடுமையான காற்றுடன் அலைகள் பெரிதாக இருந்தபோதிலும்அப்பகுதியைச் சுற்றிப் பார்த்தபோது கப்பல் ஏதும் தென்படவில்லை.இதையடுத்து கப்பல் மூழ்கியிருக்கலாம் என்று கருதுவதாக ஜப்பான்கடலோரக் காவல்படையினர் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட கப்பல் ஊழியர்கள், ஜப்பான் கடல் பகுதியில் வந்துகொண்டிருந்த மற்றொரு ரஷ்ய மீன்பிடிப் படகிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications