பயணியிடம் திருடிய ரயில்வே ஊழியர் கைது
சென்னை:
ரயில் பயணியிடம் கொள்ளை அடித்த டிக்கெட் பரிசோதகர் பிடிபட்டார். அவரிடம் இருந்து இந்திய பணம் 20ஆயிரம் ரூபாயுடன், வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் தேவராஜ் (50). சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலை செய்கிறார்.தீபாவளிக்காக அவர் சவுதியில் இருந்து இந்தியா திரும்பினார். விமானம் மூலம் மும்பை வந்த அவர் அங்கிருந்துதாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை சென்ட்ரல் வந்தார். அவர் சூட்கேசுடன், ஒரு அட்டைப் பெட்டியும் கொண்டுவந்தார்.
ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த பரிசோதகர் பால்சுந்தர்ராஜ் என்பவர், தேவராஜைவழிமறித்தார். அவர் கொண்டு வந்திருந்த அட்டைப்பெட்டிக்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்என்று மிரட்டினார். அவருக்கு ஆதரவாக அங்கிருந்த 2 போர்ட்டர்களும் பேசினர்.
ஆனால், தேவராஜ் மறுத்தார். வாக்குவாதம் செய்தார். உடனே ரயில்வே டிக்கெட் பரிசோதகரும், போர்ட்டர்களும்சேர்ந்து தேவராஜை அடித்து உதைத்து துரத்தி விட்டு அவர் கொண்டு வந்திருந்த பொருட்களை திருடிக்கொண்டனர்.
சூட்கேசில் இருந்த இந்திய பணம் 20 ஆயிரம் ரூபாய், சவுதி ரியால் 23,600 ஆகியவை இருந்தன. அவற்றைஎடுத்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தேவராஜ் சென்ட்ரல் போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் பால்சுந்தர்ராஜ்,போர்ட்டர்கள் கலைவாணன், குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணத்தைபோலீஸார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications