பூட்டோ பரம்பரைக்குப் புதிய தலைவர்
Subscribe to Oneindia Tamil
லர்கானா (பாகிஸ்தான்):
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ சார்ந்துள்ள "பூட்டோ பரம்பரைக்குபுதிய தலைவர் கிடைத்துள்ளார்.
பூட்டோ குடும்பத்தைச் சேர்ந்த சர்தார் வாஹித் புகாஷ் பூட்டோ கடந்த மாதம்கொல்லப்பட்டார். அவர்தான் இதுவரை பூட்டோ பரம்பரையின் தலைவராக இருந்துவந்தார். அவருக்குக் குழந்தைகள் கிடையாது.
பூட்டோ பரம்பரை வழக்கப்படி, குழந்தை இல்லாத நிலையில் தலைவர் இறந்துவிட்டால், அவரது தம்பிதான் அடுத்த தலைவராக வேண்டும்.
இந்த நிலையில், வாஹித் புகாஷ் பூட்டோவின் தம்பி, ஆமிர் கான் பூட்டோ அடுத்ததலைவராக வரவிருக்கிறார்.
வாஹித்தின் 40-வது நாள் காரியத்தின்போது புதிய தலைவராக ஆமிர் கான் பூட்டோபொறுப்பேற்பார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications