மல்லேஸ்வரி, பீனா மோளுக்குப் பாராட்டு
கொச்சி:
சிட்னி ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம வென்ற கர்னம் மல்லேஸ்வரிக்கும்,400 மீட்டர் ஓட்டத்தில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற பீனா மோளுக்கும்வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.
கேரள மாநிலம் கொச்சியில் மலையாள மனோரமா பத்திரிகையும், நேஷனல்பானசோனிக் நிறுவனம் இணைந்து இந்த பாராட்டு விழாவை நடத்தின.
சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரே ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இதைபளுதூக்கும் போட்டியில் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தது கர்னம்மல்லேஸ்வரி.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ஒரே இந்தியப் பெண் மல்லேஸ்வரி என்பதுகுறிப்பிடத்தக்கது. அது போல் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் பீனா மோள்தகுதி பெற்றார். ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டத்தின் அரையிறுதிக்குத் தகுதி பெற்றஇரண்டாவது பெண் பீனா மோள் ஆவார்.
இத்தகைய சிறப்புக்களைப் புரிந்த இருவரும் கொச்சியில் உள்ள மலையாள மனோரமாஅலுவலகத்திலிருந்து பாராட்டு விழா நடைபெற்ற ராஜீவ் காந்தி உள் விளையாட்டுஅரங்கத்துக்கு திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
ஜீப்புக்கு முன்னதாக யானைகள் அணிவகுத்து வந்தனர். பாராட்டு விழாவில்ஏராளமான பள்ளிச் சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டனர். விழாவுக்கு எர்ணாகுளம்மாவட்ட ஆட்சியர் கே.ஆர். விஷ்வாம்பரன் தலைமை தாங்கினார்.
மலையாள மனோரமா பத்திரிகை நிர்வாக இயக்குநரும், ஆசிரியருமான பிலிப் மேத்யூமுன்னிலை வகித்தார்.
சிட்னி ஒலிம்பிக்கில் புரிந்த சாதனையைப் பாராட்டி மல்லேஸ்வரிக்கும், பீனாமோளுக்கும் நினைவுப் பரிசுகளுடன் எர்ணாகுளம் மாவட்ட விளையாட்டுக் கவுன்சில்உறுப்பினர் பதவிகளையும் வழங்கினார் விஷ்வாம்பரன்.
மலையாள மனோரமாவும் நேஷனல் பானாசோனிக் நிறுவனமும் இணைந்து நடத்தியஒலிம்பிக் கருத்துக் கணிப்புப் போட்டியில் வெற்றி பெற்ற இருவருக்கு கர்னம்மல்லேஸ்வரி பரிசுகளை வழங்கினார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications