மீண்டும் இயந்திரக் கோளாறு .. தப்பினர் விமான பயணிகள்
சென்னை:
சென்னையில் மீண்டும் ஒரு விமானம் விபத்திலிருந்து தப்பியுள்ளது. இம்முறையும்இயந்திரக் கோளாறுதான் இதற்குக் காரணம்.
சென்னை விமான நிலையத்தில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ள ஐந்தாவது சம்பவம் இது.இதனால், 58 பயணிகள் உயிர் தப்பினார்கள்.
மரணத்தில் பிடியில் இருந்தோ அல்லது மரண வாயிலுக்குச் சென்றோ பயணிகள்அடிக்கடி மீண்டு வருவது சென்னை விமான நிலையத்தில் சாதாரணமாகி விட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கடந்த சில வாரங்களாகஇந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்வது தெரிந்ததே.இயந்திரத்தில் ஏற்படும் கோளாறுகளால் இது போன்ற காலதாமதங்கள் ஏற்பட்டுவந்தது. கடந்த இரு மாதங்களில் இது வரை ஐந்து விமானங்கள் இயந்திரக்கோளாறுகாரணமாக மரணத்தின் பிடியில் இருந்து தப்பியிருக்கிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை பெங்களூர் வழியாக கோவை செல்லும்அலையன்ஸ் விமானம் இயந்திரக்கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. 58பயணிகளுடன் ஆறு மணிக்கு புறப்பட வேண்டிய அந்த விமானம் இரவு 8 மணிக்குரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் அனைவரும்பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மாலை நான்கு மணியில் இருந்தே காத்திருந்த பயணிகளுக்கு, இரவு எட்டுமணிக்குத்தான் விமானம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதில் நொந்து போனார்கள்.இருந்தாலும் ஒரு பக்கம் நிம்மதியாக உணர்ந்தார்கள்.
இந்த முறையும் விமானம் கிளம்பிச் சென்று நடுவானில் இயந்திரக்கோளாறுகண்டுபிடிக்கப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும் என்று நடுக்கத்தோடு இருந்தார்கள்பயணிகள். தாமதத்தைவிட, உயிர் தப்பி திருப்தியே பயணிகளின் முகத்தில்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications