தந்தையைக் காப்பாற்றுங்கள் .. கருணாநிதியிடம் ராஜ்குமார் மகன்கள் கோரிக்கை
சென்னை:
காட்டுக்கு யார் போகிறார்கள் என்பது குறித்துக் கவலையில்லை. எங்களது தந்தைபத்திரமாக திரும்பி வர வேண்டும். அவரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள் என்றுநடிகர் ராஜ்குமாரின் மகன்கள், தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
பழ. நெடுமாறன்,கோபால் குழுவினர் ராஜ்குமார் இல்லாமல் திரும்பி வந்துள்ளநிலையில், ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார், புனீத்ராஜ்குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை சென்னை வந்து தமிழக முதல்வர்கருணாநிதியைச் சந்தித்தனர்.
தங்களது தந்தையை மீட்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும்நடவடிக்கைகளைத் தொடருமாறு முதல்வரிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
முதல்வரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், எங்களதுதந்தை மீட்கப்படாதது குடும்பத்தில் துயரத்தை அதிகப்படுத்தியுள்ளது.
அவர் விரைவில் திரும்ப வேண்டும் என்பதே எங்களது நோக்கம். சமாதானமுயற்சிகளுக்காக காட்டுக்கு யார் போகிறார்கள் என்பது குறித்து எங்களுக்குக்கவலையில்லை.
நாகப்பா தப்பி வந்தது உள்பட பல்வேறு காரணங்களால் எங்களது தந்தையின்விடுதலை தாமதமாகியுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
பழ. நெடுமாறன், கோபால் ஆகியோரை சந்திக்கவிருப்பதாகவும் ராஜ்குமார் மகன்கள்தெரிவித்தனர்.
ராஜ்குமார் மகன்கள் சந்திப்பு குறித்து முதல்வர் கருணாநிதி தெரிவிக்கையில், அவர்கள்சொன்னதைக் கேட்டுக் கொண்டேன். எங்களால் என்ன செய்ய முடியுமோ அதையும்அவர்களிடம் கூறினேன் என்றார் கருணாநிதி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications