Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விமான கட்டண பாக்கி: முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அரசு விமானத்தைப் பயன்படுத்தியற்கான ரூ.5.9 கோடி கட்டண பாக்கியைவசூலிக்கும் பொருட்டு முன்னாள் பிரதமர் சந்திரசேகருக்கு எதிராக டெல்லிஉயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடுத்துள்ளது.

1990-91-ம் ஆண்டு சந்திரசேகர் பிரதமராக இருந்தார். அப்போது அரசுக்குச்சொந்தமான ராணுவ விமானத்தை தனது சொந்த நடவடிக்கைகளுக்குப்பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அரசு முறைப் பயணத்துக்கு அரசு விமானத்தைப் பயன்படுத்தினால் கட்டணம் ஏதும்செலுத்த வேண்டியதில்லை. ஆனால், சொந்த நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தினால்கட்டணம் செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், சந்திரசேகர் அவ்விதம் தான் சொந்த நடவடிக்கைகளுக்காக அரசுவிமானத்தைப் பயன்படுத்தியற்கான கட்டணத்தைச் செலுத்தத் தவறிவிட்டார். அவர்பிரதமராக இருந்தபோதும், இப்போது பிரதமராக இல்லாதபோதும் கட்டணத்தைச்திருப்பிச் செலுத்தாமல் உள்ளார்.

அவருக்கு இது குறித்து பலமுறை நோட்டீஸ் அனுப்பிவிட்டோம். அவர் அதற்குப்பதிலும் தெரிவிக்கவில்லை. கட்டண பாக்கியையும் செலுத்தவில்லை. அவர் மொத்தம்ரூ. 5.91 கோடி கட்டண பாக்கியைச் செலுத்தவேண்டியுள்ளது.

இதையடுத்து அவர் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது என்று கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கே. சுத் தெரிவித்தார்.

இது தவிர, இதே காரணத்துக்காக முன்னாள் பிரதமர்கள் பி.வி. நரசிம்ம ராவ், தேவகவுடா ஆகியோருக்கு எதிராகவும் விரைவில் வழக்குத் தொடரப்படும் என்றார் சுத்.

பி.வி. நரசிம்ம ராவ் 1991 முதல் 96-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். அப்போதுஅவர் அரசு விமானத்தை சொந்த நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியற்தாகாரூ.5.52 கோடி கட்டண பாக்கி வைத்துள்ளார்.

அதேபோல் 1996 முதல் 97 வரை பிரதமராக இருந்த தேவகவுடாவும் அரசு விமானப்பயன்படுத்தியதற்காக ரூ. 54.6 லட்சம் கட்டண பாக்கி வைத்துள்ளார் என்றார் சுத்.

இவ் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ராவ் மற்றும் கவுடா மீதுவழக்குத் தாக்கல் செய்த பிறகு டிசம்பர் 7-ம் தேதிக்குள் அஃபிடவிட்டைத் தாக்கல்செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், இவ் வழக்குத் தொடர்பான அனைத்து தகவல்களையும் சமர்ப்பிக்கவேண்டும்என்றும் அரசை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அரசு விமானத்தைப் பயன்படுத்தியதற்கான கட்டண பாக்கியான ரூ.11.5 கோடியைமூன்று பிரதமர்களிடமிருந்தும் வசூலிக்கவேண்டும் என்று நீதிபதி பி.எல். வதேராஎன்பவர் தாக்கல் பொது நலன் வழக்கை அடுத்து மத்திய அரசு இப்போது நடவடிக்கைஎடுத்துள்ளது.

இதேபோன்று, பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது அரசு விமானத்தைப்பயன்படுத்தியற்கான கட்டண பாக்கிக்காக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்யாதவ் மீதும் ஒரு பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+