வாக்காளர் அடையாள அட்டை: அதிமுக, த.மா.கா புகார்
சென்னை:
வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளைதீவிரப்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்க தலைமைதேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி தலைமையில் வெள்ளிக் கிழமை அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகஅதிமுக, தமாகா உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் புகார் செய்தனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்ததேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமேவாக்களிக்க முடியும் என்று தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் அடையாள அட்டை வழங்கும் பணியில் உள்ள மந்த நிலையை போக்கிஅனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்துவது குறித்தும்,இந்த பணியில் அரசியல் கட்சிகளின் பங்கு குறித்து விவாதிக்கவும் மாநில தலைமைதேர்தல் அதிகாரி சாரங்கி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தைகூட்டியிருந்தார்.
இந்த கூட்டம் சென்னை கோட்டையில் வெள்ளிக் கிழமை காலை நடைபெற்றது. திமுகசார்பில் விடுதலை விரும்பி, அதிமுக சார்பில் பி.எச்.பாண்டியன், கே.மலைச்சாமி,தமாகா சார்பில் பீட்டர் அல்போன்ஸ், விநாயகமூர்த்தி, பாஜக சார்பில் எச்.வி.ஹண்டே,குமாரவேலு, காங்கிரஸ் சார்பில் நீலன், கராத்தே தியாகராஜன், பாமக சார்பில்குபேந்திர குணபாலன், ராமமுத்துக்குமார், மதிமுக சார்பில் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் அடையாள அட்டை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள மந்தநிலையைபோக்கி துரிதப்படுத்தவும், வாக்காளர்களிடையே விழிப்புணர்ச்சியைஏற்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் இந்த பணியில் அரசியல் கட்சிகளுக்குஉள்ள பங்கு பற்றியும் கூட்டத்தில் தேர்தல் அதிகாரி சாரங்கி வலியுறுத்தினார்.
அதிமுக, தமாகா உள்ளிட்ட எதிர்க் கட்சி பிரமுகர்கள் அடையாள அட்டைவழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் தெரிவித்தனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications