107 மீனவர்களை சிறை பிடித்த மீனவர்கள்
புதுக்கோட்டை:
மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட 107 மீனவர்கள் பத்திரமாகமீட்கப்பட்டனர். அவர்களது படகுகளும் மீட்கப்பட்டன.
இது பற்றி கூறப்படுவதாவது:
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது.இதனால், மோட்டார் படகு வைத்துள்ள மீனவர்கள் பெரிதும்பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம்,திருவாரூர் மற்றும் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் செப்டம்பர்21-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
டீசல் விலை உயர்வை வாபஸ் பெறவேண்டும். மீனவர்களுக்கு சலுகைவிலையில் டீசல் வழங்கவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளையும்வலியுறுத்தி அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அக்டோபர் 14-ம்தேதி வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு மீண்டும்தொழிலுக்குச் சென்றனர். இதனால், வேலைநிறுத்தத்தில் தொடர்ந்துஈடுபட்டு வந்த மீனவர்கள் கடும் கோபம் அடைந்தனர்.
இந் நிலையில் ஜகதாபட்டினம் கடல் பகுதியில் மண்படம் பகுதியைச்சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருப்பதாக ஜகதாபட்டினம்மீனவர்களுக்குச் செய்தி எட்டியது.
உடனே ஏராளமான மீனவர்கள் படகுகளில் சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்த மண்டபம் பகுதியைச் சேர்ந்த 107 மீனவர்களையும்சிறைப்பிடித்தனர். அவர்கள் வந்த படகுகளையும் சிறைப்பிடித்தனர்.
இச் சம்பவத்தை அடுத்து கடலோர பகுதிகளில் வசிக்கும்மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்துஜகதாபட்டினம் பகுதி மீனவர்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.இதையடுத்து தாங்கள் பிடித்து வைத்திருந்த மீனவர்களையும்,படகுகளையும் அவர்கள் விடுவித்தனர். வெள்ளிக்கிழமை இரவு 107மீனவர்களும் விடுவிக்கப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications