ஷார்ஜா கிரிக்கெட்: இந்தியாவை வென்றது இலங்கை
ஷார்ஜா:
ஷார்ஜா கோப்பைக்கான முதல் ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில்இந்தியாவைத் தோற்கடித்தது.
கோக-கோலா நிறுவனம் நடத்தும் இப்போட்டித் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்றுவருகிறது. வெள்ளிக்கிழமை நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கையும்மோதின.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை மட்டுமே இந்தியா எடுத்தது.
இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக ஆடி 101 ரன்கள் எடுத்தார். ஒரு நாள்போட்டியில் டெண்டுல்கர் அடித்த 26-வது சதமாகும் அது. அவருக்கு அடுத்து ராபின்சிங் நின்று ஆடி 35 ரன்கள் எடுத்தார்.
50 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இலங்கைதனது இன்னிங்ஸைத் தொடங்கியது.
தொடக்கமே அந்த அணிக்கு பெருத்த அடியாக இருந்தது. அணியின் எண்ணிக்கை 17ஆக இருந்தபோது தொடக்க ஆட்டக்காரர் குணவர்த்தனே அவுட்டானார்.
அடுத்து வந்த அட்டபட்டுவும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். 21 ரன்களில் 2விக்கெட்டுகளை இழந்து இலங்கை தவித்தது.
ஆனால், கேப்டனும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரருமான ஜெயசூர்யாவும், அடுத்துவந்த ரஸல் அர்னால்டும் நின்று ஆடினர். ஜெயசூர்யா வழக்கமான தனது அதிரடிஆட்டத்தைக் கையாண்டார்.
ஜெயசூர்யா 48 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். அர்னால்டு 59 ரன்கள்எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ஜெயவர்த்தனே, சங்காகரா ஆகியோரும் நின்றுஆடி தங்களது பங்குக்கு ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தனர்.
ஜெயவர்த்தனே 38 ரன்கள் எடுத்தார். சங்காகரா 40 ரன்கள் எடுத்து கடைசி வரைஅவுட்டாகாமல் இருந்தார்.
இறுதியில் 43.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்து இலங்கை வெற்றிபெற்றது. இந்திய அணியில் அகார்கர், பிரசாத் இருவரும் 2 விக்கெட்டுகளைவீழ்த்தினர்.
சதமடித்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆட்ட நாயகராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இலங்கையும், ஜிம்பாப்வேயும் மோதுகின்றன.இந்தியா அடுத்து 22-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை எதிர்த்துவிளையாட உள்ளது.
ஸ்கோர்:
இந்தியா - 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் (டெண்டுல்கர் 101ரன்கள்).
இலங்கை - 43.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications