எல்லா அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு: நிர்ப்பந்தத்தில் இலங்கை
கொழும்பு:
இலங்கையில் அனைத்து அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டியநிர்ப்பந்தம் அந் நாட்டு அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவின் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகேதலைமையிலான கூட்டணி அரசு வியாழக்கிழமை பதவியேற்றது.
சாதனை அளவாக மொத்தம் 46 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த46 பேரில் பலருடைய உயிருக்கு மிரட்டல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அமைச்சர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியில் அமைச்சர்கள்பாதுகாப்புப் பிரிவு ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் உளவுத் துறை ஒரு அதிர்ச்சியானதகவலை வெளியிட்டது.
எந்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் அதைப் பயன்படுத்தி அமைச்சர்களைக் கொல்லவிடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் திட்டமிட்டிருக்கின்றனர் என்றதகவல்தான் அது.
இதையடுத்து அமைச்சர்கள் அனைவருக்கும் அதிகபட்ச பாதுகாப்பை அளிக்கும்நிர்பந்தத்தில் அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவு உள்ளது.
உளவுப் பிரிவின் எச்சரிக்கையை அடுத்து ஹோட்டல்கள், தனியார் இடங்களில்நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவேண்டாம் என்று அமைச்சர்களைபாதுகாப்புப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகேவும், உளவுப் பிரிவின் எச்சரிக்கையை உணர்ந்துபாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்றுச் செயல்படும்படி அமைச்சர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமைச்சர்களுக்கு எந்த வகையில் உயர்ந்தபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளைமேற்கொள்வது என்று பாதுகாப்புப் பிரிவு திட்டமிட்டுள்ளது. எந்த ஒருசந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு வட்டத்தை விட்டு வெளியேறவேண்டாம் என்றுஅமைச்சர்களை அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உயிருக்கு மிரட்டல் வந்துள்ள அமைச்சர்களுக்கு சிறப்பு மற்றும் கூடுதல் பாதுகாப்புஅளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்ட பாதுகாப்புவீரர்களின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உயிருக்கு மிரட்டல் விடுக்கப்படும் அமைச்சர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்பாதுகாப்புப் பிரிவு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிபர் மாளிகையில்தான் கடந்த வியாழக்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்புவிழா நடைபெற்றது. அப்போது மாளிகைக்கு வெளியே தற்கொலைப் படையைச்சேர்ந்த ஒருவர் ஒரு அமைச்சரவைக் கொல்வதற்காகக் காத்திருந்தார்.
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அந்த தற்கொலைப் படை நபர் தான்வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் 2 போலீஸார்கொல்லப்பட்டனர். 23 பேர் படுகாயமடைந்தனர்.
இதேபோல் 2 மாதத்துக்கு முன் ஒரு அமைச்சரைக் கொல்ல கொழும்பில் உள்ள கண்மருத்துவமனை அருகே தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் காத்திருந்தார்.
பாதுகாப்பு பலமாக இருந்ததால், தன்னிடமிருந்த வெடிகுண்டை இயக்கச் செய்து அந்நபர் தற்கொலை செய்து கொண்டார். இச் சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 19பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் ஆதரவு எனக்குத்தான் - சந்திரிகா:
இதற்கிடையே, மக்கள் ஆதரவு எனக்குத்தான் என்று அதிபர் சந்திரிகா குமாரதுங்காதெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த தேர்தலில் தங்களது ஆதரவை மக்கள் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.இதன் மூலம் இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண மக்கள்கூட்டணி அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு தங்கள் ஆதரவையும் அவர்கள்தெரிவித்துள்ளனர் என்று அறிக்கையில் சந்திரிகா தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications