மேற்குக் கரையில் பாதுகாப்பைப் பலப்படுத்துகிறது இஸ்ரேல்
மேற்குக் கரை (இஸ்ரேல்):
மேற்குக் கரை மற்ரும் காஸா பகுதியில் பாதுகாப்பை இஸ்ரேல் பலப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் துருப்புக்களுடன் நடந்த மோதலில் 5 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதையும், 200 பேருக்கு மேல்காயமடைந்ததையும் அடுத்து இந் நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் துருப்புக்களுக்கும் கடும் சண்டை ஏற்பட்டது. இதையடுத்துஎகிப்து பிரதமர் ஹோஸ்னி முபாரக், அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் முன்னிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம்ஏற்பட்டது.
பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத், இஸ்ரேல் பிரதமர் ஈத் பாரக் இருவருக்கும் இடையே கையெழுத்திடப்படாதவகையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பும் ஆனால், போர் நிறுத்தத்தை அறிவித்தன.
ஆனால், தொடர்ந்து மேற்குக் கரையிலும், காஸா பகுதியிலும் இரு தரப்புக்களுக்கும் இடையே கடும் சண்டைதொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது.
சமீபத்திய சண்டையில் 5 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாலஸ்தீனியர்களின் தாக்குதல்தீவிரமாகலாம் என்ற முன்னெச்சரிக்கையில் காஸா பகுதி மற்றும் மேற்குக் கரைப் பகுதியில் தனது பாதுகாப்பைஇஸ்ரேல் பலப்படுத்தியுள்ளது.
எப்போதும் பதற்றத்துடன் காணப்படும் இரு பகுதியிலும் இஸ்ரேல் துருப்புக்கள் தொடர்ந்து கண்காணித்துவருகின்றன. எந்த தாக்குதலையும் சந்திக்க அவை தயாராக இருப்பதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, தொடரும் வன்முறை குறித்தும், பாலஸ்தீனத்துடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்துகலந்துகொள்வதா வேண்டாமா என்பது குறித்தும் விவாதிப்பதற்காக அமைச்சரவைக் கூட்டத்தை பிரதமர் ஈத் பாரக்ஞாயிற்றுக்கிழமை கூட்டியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications