பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி பயணம்: நவ.15-ம் தேதி முடிவாகும்
ஷார்ஜா:
பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்வது பற்றிநவம்பர் 15-ம் தேதி முடிவு தெரியும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச்செயலர் லேலே தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு (2001) ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்குச்சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது. இப் பயணத்துக்கு அனுமதி கோரி மத்தியஅரசுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விண்ணப்பித்துள்ளது.
மத்திய அரசிடமிருந்து நவம்பர் 15-ம் தேதிக்குள் அனுமதி கிடைத்துவிடும் என்றுஎதிர்பார்க்கிறோம். அதன் பிறகுதான் சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகள்செய்யப்படும்.
மேலும் அதன்பிறகுதான் இந்திய அணியின் சுற்றுப்பயணம் குறித்து பாகிஸ்தான்கிரிக்கெட் வாரியத்துக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்வதால் எந்தபாதுகாப்புப் பிரச்சினையும் ஏற்படாது என்று கருதுகிறோம். அங்கு இந்திய கிரிக்கெட்அணிக்கு நல்ல மரியாதையும், கவனிப்பும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் ரீதியில் பல பிரச்சினைகள் உள்ளன. கார்கில்பிரச்சினைக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணிவிளையாடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆனால், அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டு, பாகிஸ்தானுக்கான இந்திய கிரிக்கெட்அணியின் சுற்றுப்பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கும் என்றுகருதுகிறோம்.
இப் பிரச்சினையால் டொரான்டோவில் இரு நாடுகளுக்கும் இடையே ஆண்டுதோறும்நடைபெறும் சகாரா கோப்பைக் கிரிக்கெட் போட்டி நிறுத்தப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்ய இந்திய அரசு அனுமதிகொடுத்தால் அங்கு 3 டெஸ்ட்டுகள் மற்றும் 5 ஒருநாள் ஆட்டங்களில் இந்தியாவிளையாடும்.
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ அறிக்கையில் கிரிக்கெட்வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அந்த விசாரணை அறிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாகவெளியிடப்படவில்லை. ஆகவே அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை.
அறிக்கை வெளியானவுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கிரிக்கெட்வாரியம் கடும் நடவடிக்கை எடுக்கும். வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாடஆயுட்காலத் தடையும் விதிக்கப்படும்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய வெளிநாட்டுப் பயிற்சியாளரை நியமிப்பது எனவாரியத்தின் முடிவு இறுதிகட்டத்தை அடைந்துவிட்டது.
வெளிநாட்டு பயிற்சியாளர்களுக்கான விதி முறைகள், நிபந்தனைகள் ஆகியவைதிங்கள்கிழமை (அக்.23) இறுதி செய்யப்படும்.
ஆஸ்திரேலியாவின் கிரெக் சாப்பல், நியூசிலாந்தின் ஜான் ரைட் ஆகியோரில் ஒருவர்இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளார். இருவரிடமும்சென்னையில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
அந்த ஆலோசனைக்குப் பிறகு புதிய பயிற்சியாளர் யார் என்பது அறிவிக்கப்படும்.மேலும் அவருக்கான நிபந்தனைகள், எவ்வளவு காலம் அவர் பயிற்சியாளராகஇருப்பார் என்பதும் அப்போது அறிவிக்கப்படும் என்றார் லேலே.
சிபிஐ மறுப்பு:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையில் 4 கிரிக்கெட் வீரர்களின்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளில் வந்துள்ள செய்தியை சிபிஐமறுத்துள்ளது.
அச் செய்திகள் உண்மையல்ல. அது யூகத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.எங்களைப் பொறுத்தவரை விசாரணை அறிக்கையை நாங்கள் இன்னும் மத்தியஅரசிடம் சமர்ப்பிக்கவில்லை என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தீன்ஷாவும் அச் செய்திகளை மறுத்துக்கூறியுள்ளார். மத்திய அரசிடம் சிபிஐ அறிக்கை சமர்ப்பிக்காதவரை அது பற்றி எந்தகருத்தையும் கூறமுடியாது என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications