கேரளத்தில் விஷச் சாராயத்துக்கு 21 பேர் பலி - பல பேருடைய உயிர் ஊசல்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் ஒரே மாவட்டத்தில் இரு வெவ்வேறு விஷச் சாராய சம்பவங்களில்ஒரு பெண் உள்பட 21 பேர் பலியானார்கள். 100 பேருக்கு மேல் உயிருக்கு ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது பற்றி கூறப்படுவதாவது:

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சாத்தன்னூர் அருகேயுள்ளது கல்லுவாத்துக்கல்என்ற கிராமம். இக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளூர் கள்ளச்சாராய வியாபாரியிடம்சனிக்கிழமை சாராயம் வாங்கிக் குடித்தனர்.

சிறிது நேரத்தில் சாராயம் குடித்த பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாகஅவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், 11 பேர்உயிரிழந்தனர். இவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார். 100 பேருக்கு மேல்ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச் சம்பவத்தில் இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரும் கூலித் தொழிலாளர்கள்என்றும், கல் குவாரி தொழிலாளர்கள் என்றும் கூறப்படுகிறது.

சிகிச்சை பெறுபவர்களில் பலர் இன்னும் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை.இதனால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

விஷச் சாராயத்தை ஒரு பெண்தான் விற்றுள்ளார். ஹயருன்னிசா என்ற அந்தப் பெண்கைது செய்யப்பட்ள்ளார். ஏற்கெனவே இவரிடம் சாராயம் வாங்கிக் குடிந்த ஒருவர்இறந்தார். மற்றொருவருக்கு கண் பார்வை பறிபோனது. இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.

உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்த அவர் மீண்டும் சாராயம் காய்ச்சிவிற்றுவந்தார். இப்போது அவரிடம் சாராயம் வாங்கிக் குடித்த 10 பேர்பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல், கொல்லம் மாவட்டத்தில் நடந்த மற்றொரு விஷச் சாராய சம்பவத்தில் 5பேர் பலியானார்கள்.

சம்பவ இடங்களுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, மாநில முதல்வர் இ.கே.நாயனார், அமைச்சர் சிவதாச மேனன் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+