காதலன் வீட்டு முன் காதலி உண்ணாவிரதம்
கோவை:
காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்ட காதலனைக் கண்டித்து அவரது வீட்டின் முன்பு பேனர்கட்டி, உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார் காதலி.
திருமணம் செய்து கொள்ளும் வரை இந்த உண்ணாவிரதம் தொடரும் என்று அப்பெண் கூறியுள்ளார்.
இது பற்றி கூறப்படுவதாவது:
கோவை சுண்டக்காத்தூர் அருகே உள்ள புள்ளாக்கவுண்டன்புதூரைச் சேர்ந்தவர்பொன்னுசாமி. இவர் டீ கடை வைத்துள்ளார். இவரது மகள் கவிதா (19). டீ கடையில்தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார்.
இந் நிலையில், அந்த கடைக்கு அடிக்கடி டீ சாப்பிட வந்து சென்ற அதே ஊரைச் சேர்ந்தநடராஜனை (30) காதலிக்கத் தொடங்கினார் கவிதா.
கவிதாவின் காதலை அறிந்து அந்த காதலை ஏற்று நடராஜனும் கவிதாவை காதலிக்கத்தொடங்கினார். கட்டாயம் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதி அளித்தநடராஜனிடம் எல்லையை மீறினார் கவிதா.
இதனால் கவிதா கர்ப்பமடைந்தார். இதனால், பயந்து போன கவிதா தன்னைத்திருமணம் செய்து கொள்ளும்படி நடராஜனிடம் கேட்டார்.
ஆனால், திருமணம் செய்து கொள்வதை விடுத்து. கர்ப்பத்தைக் கலைக்கும்படிநடராஜன் கூறினார். மேலும், கர்ப்பத்தைக் கலைத்தால்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறினார்.
இதையடுத்து கர்ப்பத்தை கலைக்கும் மாத்திரியை கவிதா தின்றார். ஆனால், கர்ப்பம்கலையவில்லை. இதையடுத்து கவிதாவிடம் ரூ. 1,500 கொடுத்து கோவை சென்றுகர்ப்பத்தைக் கலைக்கும்படி நடராஜன் கூறியுள்ளார்.
ஆனால், கவிதாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், கருவைக் கலைக்க முடியாது என்றுகூறிவிட்டனர். இதனால், நான் ஒன்றும் செய்யமுடியாது. கர்ப்பத்துக்கு நான்காரணமில்லை. திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று நடராஜன்மறுத்துவிட்டார்.
இதனால், செய்வதறியாது கவிதா தவித்தார். ஆனாலும், அவருக்கு ஒரு புதுமையானஐடியா தோன்றியது.
ஒரு பெரிய துணியை வாங்கி அதில் கொட்டை எழுத்துக்களில், "காதலனால்கர்ப்பமடைந்த காதலியின் கண்ணீர் கதை, காதலன் தலைமறைவு. நீதிகேட்டு சாகும்வரை உண்ணாவிரதம் என பேனராக எழுதி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
நடராஜனின் வீட்டுக்கு வெளியே அவர் உண்ணாவிரதம் இருக்கிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications