ஷார்ஜா கிரிக்கெட்: இலங்கைக்கு இரண்டாவது வெற்றி
ஷார்ஜா:
ஷார்ஜா கோப்பைக்கான போட்டித் தொடரில் இலங்கை தனது இரண்டாவதுவெற்றியைப் பெற்றது.
ஜிம்பாப்வேக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில்இந்தியாவை இலங்கை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பீல்டிங்கைத்தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட்இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது.
ஆன்டி பிளவர் 120 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்து விலோயன் 63 ரன்கள்அடித்தார். இருவரும் அவுட்டாகாமல் 5-வது விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியினரின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கால் ஜிம்பாப்வே அதிகரன்களைக் குவிக்க முடியவில்லை.
அடுத்து ஆடிய இலங்கை 47 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அணியின் எண்ணிக்கை 2-ஆக இருந்தபோது குணவர்த்தனே அவுட்டானார். ஆனால்அடுத்து வந்த அட்டபட்டுவும், கேப்டன் ஜெயசூர்யாவும் நின்று ஆடி ரன்கள்குவித்தனர்.
இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 157 ரன்கள் குவித்தனர். ஜெயசூர்யா 78 ரன்களும்,அட்டபட்டு 90 ரன்களும் எடுத்தனர். ஜெயவர்த்தனே 25 ரன்களும் சங்ககரா 15ரன்களும் எடுத்து கடைசி வரைஅவுட்டாகவில்லை.
இது இலங்கைக்குக் கிடைத்த 2-வது வெற்றி. இலங்கை அடுத்து 25-ம் தேதி மீண்டும்ஜிம்பாப்வேயை எதிர்த்து விளையாட உள்ளது. அந்த ஆட்டத்தில் இலங்கை வெற்றிபெற்றால் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும், ஜிம்பாப்வேயும்மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இது முக்கியமான ஆட்டமாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications