பார்வார்ட் பிளாக் எம்.எல்.ஏ. வல்லரசு மரணம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

பார்வார்டு பிளாக் எம்.எல்.ஏ. வல்லரசு சனிக்கிழமை மாரடப்பால் காலமானார்.அவருக்கு வயது 54.

உசிலம்பட்டி தொகுதியைச் சேர்ந்த இவர், விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிப்புத்தூர்அருகே உள்ள மம்சாபுரம் என்ற இடத்தில் சனிக்கிழமை நடந்தபொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

தேவர் சமுதாயத்திற்கு முதல்வர் கருணாநிதி செய்த சாதனைகளையும், ஜெயலலிதாசெய்த பாதகங்களையும் விளக்கி மிகவும் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார்.அப்போது மணி இரவு 10.15.

திடீரென்று தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி பேச்சை நிறுத்திவிட்டு மேடையில்இருந்து நாற்காலியில் உட்கார்ந்தார். உடனே அவர், அருகில் உள்ளமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர்இறந்துவிட்டார்.

54 வயதான அவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்தார். அவரதுமரணத்தை அடுத்து மம்சாபுரம் பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

பொது மக்கள் பார்வைக்காக அவரது சடலம் அவரது இடத்தில் ஞாயிற்றுக்கிழமைபார்வைக்காக வைக்கப்படும். பின்னர் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அவரதுஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+