மீன் கேட்டு "அடம் பிடிக்கும் ஆடு
கோவை:
கோவையில் மீன்களைச் சாப்பிடும் அதிசய ஆடு வளர்ந்து வருகிறது. இந்த ஆடுகுறைந்தபட்சம் வாரம் இருமுறை இரண்டு கிலோ மீன்களைச் சாப்பிடுகிறது. 5முட்டைகளும் இதற்கு வழங்கப்படுகின்றன.
கோவை கவுண்டம்பாளையத்தில் வசிப்பவர் பாபு. இவர் காய்கறிக் கடை நடத்திவருகிறார். சொந்த ஊர், திருச்செந்தூர் அருகே உள்ள பூச்சிக்காடு. ஆறு மாதங்களுக்குமுன்பு இவர் ஒரு ஆட்டுக் குட்டியை வாங்கி வளர்த்து வந்தார்.
இந்த ஆட்டுக் குட்டியுடன் குழந்தைகள் விளையாடி வந்தனர்.
அப்போது, வீட்டில் சமைக்கும் முட்டையை விளையாட்டாகக் கொடுத்துப் பழக்க,தொடர்ந்து முட்டையைச் சாப்பிடத் தொடங்கியது. பின்னர், சில நாட்கள் கழித்து மீன்துண்டுகளையும் கொடுக்க, ருசி கண்டு விட்டது ஆடு.
தற்போது பசும்புல்லைக் கூட தின்ன மறுக்கிறது. அசைவம் கொடுத்தால் மட்டுமேசாப்பிடுகிறது. எனவே, பாபு, வாரம் இருமுறை இதற்கு கண்டிப்பாக அசைவம்கொடுத்து விடுகிறார்.
மீன்களைப் பச்சையாகவே சாப்பிடும் இந்த ஆட்டிற்கு மத்தி மீன் என்றால், மிகவும்பிடிக்குமாம். இதனை ருசித்துச் சாப்பிடுகிறது. இது தவிர, வாரத்திற்கு 5முட்டைகளையும் சாப்பிட்டு விடுகிறது.
இந்த ஆட்டுக் குட்டியை இவர்கள், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலுக்கு நேர்த்திக் கடன் நிறைவேற்ற வளர்த்து வந்தனர். ஆனால்,இப்போது அசைவம் சாப்பிடுவதால் இதனை கோயிலுக்குப் பயன்படுத்தக் கூடாதுஎனக் கருதி, இவர்களே வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.
இனி வரும் காலத்தில், பசித்தால் புலி கூட புல்லைத் தின்னும் நிலை உருவானால்ஆச்சர்யப்படுவதற்கில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications