வளர்த்தவரைப் பிரிந்த ஏக்கம், துக்கத்தில் உயிரைவிட்ட கரடி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

வளர்த்தவரிடமிருந்து வனத் துறை அதிகாரிகளால் பிரித்து வனவிலங்குப்பூங்காவுக்குக் கொண்டு செல்லப்பட்ட கரடி ஏக்கம் மற்றும் துக்கத்தால் இறந்தது.

இது பற்றிக் கூறப்படுவதாவது:

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் அமராவரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருஇளைஞர் இரு கரடிகளை வளர்த்து வந்தார். வன விலங்குகளை அனுமதி இல்லாமல்வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும்.

இதையடுத்து அந் நபரை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.கரடிகளை வளர்ப்பதற்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை. இதையடுத்துகரடிகளுடன் போலீஸ் நிலையத்திலேயே ஒரு இடத்தில் அந் நபரைப் போலீஸார் தங்கவைத்தனர்.

அப்போது கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு கரடியுடன் அந் நபர்தப்பிவிட்டார். இதனால், விட்டுச் செல்லப்பட்ட கரடியை என்ற செய்வது என்றுதெரியாமல் போலீஸார் குழம்பினர்.

உடனே, ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்கா அதிகாரிகளை அவர்கள்தொடர்பு கொண்டு நிலைமை விலக்கினர். உடனடியாக உயிரியல் பூங்காவிலிருந்துஊழியர்கள் வந்து கரடியை பூங்காவுக்கு எடுத்துச் சென்றனர்.

ஆனால், அடுத்த 3 மணி நேரத்தில் அந்த கரடி இறந்துவிட்டது. தன்னை வளர்த்தவர்போலீஸ் நிலையத்தில் விட்டுச் சென்ற பிறகு தண்ணீர் குடிக்காமல் எந்த உணவும்உட்கொள்ளாமல் சோகமாக இருந்தது கரடி.

வளர்த்தவரைப் பிரித்த ஏக்கம் மற்றும் துக்கத்திலேயே அந்த கரடி தன் உயிரை விட்டதுஅப் பகுதி மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், கரடி இறந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான்தெரியவரும் என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+