கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளர்: இன்று இறுதி முடிவு இல்லை
சென்னை:
இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளர் நியமிப்பது குறித்துதிங்கள்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியச் செயலர் லேலே தெரிவித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்குழுக்கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளர் நியமிப்பதுஎன்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி வெளிநாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களின் பெயர்கள்பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் நியூசிலாந்து வீரர் ஜான் ரைட் பெயரும்ஆஸ்திரேலியாவின் கிரெக் சேப்பல் பெயரும் இறுதி செய்யப்பட்டன. அவர்களிடம்சென்னையில் திங்கள்கிழமை நேர்காணல் நடைபெறுகிறது.
இந்திய அணிக்கான புதிய பயிற்சியாளர் யார் என்று அன்றே அறிவிக்கப்படும் என்றுகூறப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா, செயலாளர்லேலே, தேசிய கிரிக்கெட் அகாதெமி தலைவர் அனுமந்த் சிங், இயக்குநர் ராஜ் சிங்துங்கார்பூர், ஐ..சி.சி.யின் சர்வதேச நடுவர் எஸ். வெங்கட்ராகவன் ஆகியோர்நேர்காணல் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந் நிலையில், நேர்காணலுக்காக ஷார்ஜாவிலிருந்து திங்கள்கிழமை காலை சென்னைவந்த லேலே நிருபர்களிடம் கூறியதாவது:
ஜான் ரைட், கிரெக் சேப்பல் இருவரிடமும் நேர்காணல் நடத்தப்படும். ஆனால், இந்தியஅணிக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளரை நியமிப்பது குறித்து எந்த இறுதி முடிவும்திங்கள்கிழமையே எடுக்கப்படாது.
நியமிக்கப்படும் பயிற்சியாளருக்கான நிபந்தனைகளும், விதிமுறைகளும்,கட்டுப்பாடுகளும்தான் திங்கள்கிழமை முடிவு செய்யப்படும். நேர்காணலுக்குப் பிறகுபயிற்சியாளரை நியமிப்பது குறித்து கிரிக்கெட் வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்படும்அளவுக்குத்தான் இந்த நேர்காணல் இருக்கும்.
இவர்தான் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் என்று திங்கள்கிழமைஅறிவிக்கப்படாது. அது பிறகு ஒருநாள் அறிவிக்கப்படும் என்றார் லேலே.
நேர்காணலுக்காக சென்னை வந்துள்ள ஜான் ரைட் கூறியதாவது:
இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன். அதற்கான தேர்வுக்குசென்னை வந்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். நேர்காணல் முடிந்தபிறகுதான் மேற்கொண்டு எதையும் கூறமுடியும் என்றார் அவர்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இப்போதுதான் வெளிநாட்டுப்பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பாபி சிம்சன் சில காலத்துக்கு முன் இந்திய அணிக்குதொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications