குர்ஸ்க் கப்பலில் துளையிட்டு நார்வே, ரஷ்ய நீர்மூழ்கி வீரர்கள் சாதனை
மாஸ்கோ:
கடலில் மூழ்கிய ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான குர்ஸ்க் நீர்மூழ்கிக் கப்பலில் ரஷ்யமற்றும் நார்வே நாட்டு நீர்மூழ்கி வீரர்கள் துளை போட்டு பரிசோதனை நடத்தி சாதனைபடைத்துள்ளனர்.
இது பற்றி கூறப்படுவதாவது:
ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான குர்ஸ்க் என்ற நீர்மூழ்கிக் கப்பல் ஆர்ட்டிக் பகுதியில்பேரன்ட் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 118 கடற்படை வீரர்களும்நீரில் மூழ்கி மூச்சுத் திணறி இறந்தனர்.
இவ் விபத்து ஆகஸ்ட் 12-ம் தேதி நடந்தது. கப்பலுக்குள் இருந்தவர்களை மீட்க ரஷ்யமற்றும் நார்வே நாட்டு நீர்மூழ்கி வீரர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.ஒருவாரத்துக்கும் மேலாக நடந்த இம் முயற்சியால் எந்த பலனும் கிட்டவில்லை.
இதையடுத்து மீட்பு முயற்சிகள் கைவிடப்பட்டன. கப்பலில் இருந்த 118 பேரும்உயிருடன் மீட்கப்படவில்லை. அவர்களது சடலங்களும் இன்றுவரைமீட்கப்படவில்லை. இவ் விபத்து குறித்து விசாரணை நடத்த தனி விசாரணைகமிட்டியை ரஷ்ய அரசு நியமித்துள்ளது.
அணு சக்தியால் இயங்கும் அந்த கப்பல் ஒரு வலுவான பொருளுடன் மோதிவிபத்துக்குள்ளானது. இதனால், ஆட்கள் இருந்த கப்பலின் 8-வது சேம்பர் முழுவதும்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்தால் கப்பலுக்குள் அணுக் கதிர் வீச்சு ஏற்பட்டு அதனால், வீரர்கள்இறந்திருக்கலாமா என்று சந்தேகம் எழுந்தது. இருப்பினும், கப்பலுக்குள்இறந்துபோனவர்களின் சடலங்களை மீட்கும் முயற்சி மீண்டும்மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப் பணியில் ரஷ்ய மற்றும் நார்வே நாட்டு நீர்மூழ்கி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இப்பணியின் முதற்கட்டமாக கப்பலின் 8-வது சேம்பர் பகுதியில் அவர்கள் ஓட்டைபோட்டனர்.
பின்னர் சேம்பருக்குள் இருந்த நீரை வெளியே எடுத்து அதில் அணுக் கதிர் வீச்சுஉள்ளதா என்று அவர்கள் பரிசோதித்தனர். இப்படி கடலில் மூழ்கிய நீர்மூழ்கிக்கப்பலில் ஓட்டை போட்டு பரிசோதனை நடத்துவது இதுவே முதன்முறை. அத்தகையசாதனையை நார்வே மற்றும் ரஷ்ய நீர்மூழ்கி வீரர்கள் புரிந்துள்ளனர்.
நார்வே நாட்டின் ரிகாலியா என்ற நீர்மூழ்கி வாகனத்தின் உதவியுடன் நீர்மூழ்கி வீரர்கள்கடலுக்கடியில் சென்று குர்ஸ்க் கப்பலில் சோதனை நடத்தி வருகின்றனர்.
கப்பலுக்குள் சிக்கியுள்ள வீரர்களின் சடலங்களை மீட்க முயற்சித்து வருகிறோம்.அவை மீட்கப்படும் நிலையில் இருந்தால் மட்டுமே மீட்போம். இல்லையென்றால்சடலங்களை அங்கேயே விட்டுவிடுவோம் என்று நீர் மூழ்கி வீரர்கள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications